பக்கம்:இருளும் ஒளியும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருமை 35

நறுக்கச் சொன்னல் விரல் பருமனுக்கு நறுக்கி வைத்திருக்கி ருயே! என்று கூறினுள் பாகீரதி அம்மாமி.

'த்லொ . . . . த்லொ. . . . திரும்பவும் நறுக்கிவிடட்டுமா மாமி என்று கேட்டாள் ஸ்வர்ணம் பாகிரதியைப் பார்த்து. வேண்டாம்: வேண்டாம். நாட்டுப்பெண் வருகிற

நாழிகை ஆகிறது. நீ போய் மற்றக் காரியங்களைக் கவனி" என்ருள் அந்த அம்மாள்.

அவள் சொல்லி வாய்மூடுமுன் வாசலில் வண்டி வந்து நின்றது. அதிலிருந்து மங்களமும், சந்துருவும், சாவித்திரியும் இறங்கிஞர்கள். ஸரஸ்வதி பரக்கப் பரக்க ஆரத்தி எடுத்துக் கொண்டு வந்தாள். அவள் முகத்தில் பொங்கிய சந்தோஷத்தைக் கண்டு சந்துரு வியப்படைந்தான்்.

'வா, சாவித்திரி! வாருங்கள் மாமி' என்று புன்முறுவ லுடன் வரவேற்ருள் ஸரஸ்வதி. அவர்களை அழைத்துவிட்டு அவள் திரும்பியபோது சந்துரு தன்னையே உற்றுப் பார்ப்பதை அறிந்ததும் அவளுக்கு வெட்கமாகப் போய் விட்டது. ரகுபதி அதுசமயம் வெளியே சென்றிருந்ததால் சங்கோஜத்துடன் ஸ்ரஸ்வதி அவனைப் பார்த்து, 'வாருங்கள்' என்று அழைத்தாள். பல வருஷங்களுக்கு அப்புறம் அவ்வீட்டிற்கு ஒளி தர வந்திருக்கும் சாவித்திரி, மாமியாரை நமஸ்கரித்தபோது ஸ்வர்னம்பாள் உணர்ச்சி மிகுதியால் வாயடைத்து நின்ருள். கண்களில் ஆனந்த பாஷ்பம் பொங்கி வழிந்தது. உவகையுடன் உள்ளம் பூரிக்க, பெருமிதத்துடன் சாவித்திரியைக் கட்டி அனைத்துக்கொண்டாள்.

'வீட்டிலே எல்லோரும் செளக் யந்தான்ே, மாமி ?' என்று ஸரஸ்வதி மங்களத்தை விசாரித்தபோது, 'செளக்யந்தான்ே?" என்று தன்னை நேரில் கேட்பதற்கு வெட்கப்பட்டுக்கொண்டு ஸரஸ்வதி மறைமுகமாகத் தன் தாயை விசாரிப்பதாக நினைத்த சந்துரு, சீதா உன்னை ரொம்பவும் விசாரித்ததாகச் சொல்லச் சொன்னுள். உன்னிடம் கற்றுக்கொண்ட பாட்டுகளைப் பாடம் பண்ணிவிட்டதாகவும் சொன்னாள்' என்ருன்.

'ஒஹோ!' என்று அவனுக்குப் பதில் அளித்துவிட்டு ஸரஸ்வதி மற்ற அலுவல்களைக் கவனிக்க உள்ளே சென்ருள்.

இதற்குள்ளாக வெளியே போயிருந்த ரகுபதி திரும்பி விடவே சாவித்திரியும். மங்களமும் கூடத்திலிருந்து பின் கட்டுக்குச் சென்றார்கள்.