பக்கம்:இருளும் ஒளியும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 இருளும் ஒளியும்.

'வந்தவர்களை வா என்றுகூடச் சொல்லத் தெரியாமல் பிரமித்து உட்கார்ந்திருக்கிருயே ஸ்வர்ணம். நாலு வார்த் தைகள் நறுக்கென்று பேசத் தெரியவில்லையே உனக்கு!' என்று பாகீரதி அம்மாமி கையில் பிடித்த கரண்டியுடன் சம்பந்தி அம்மாளை வரவேற்று, ஸ்வர்ணத்தைப் பரிகாசம் செய்தாள்.

ஸ்வர்ணம் நிஜமாகவே பிரமித்துப்போய் இருந்தாள். ஒன்றரை வயதுக் குழந்தையிலிருந்து தகப்பன் இல்லாமல் அல்லும் பகலும் அரும்பாடுபட்டு வளர்த்த குழந்தைக்குக் கல்யாணம் ஆகி மனைவி வந்திருக்கிருள் என்றால் அது எளிதான் காரியமா? நாலு பேரைப்போல் அவளும் பேரன் பேத்தி எடுக்கப் போகிருள். இருண்டிருந்த வீட்டில் ஒளி வீசப்போகிறது. இனிமேல் தன்னை மிஞ்சக்கூடியவர்கள் யாரும் இல்லை என்றே அவளுக்குத் தோன்றியது.

சாவித்திரி புக்ககம் வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. அந்த இரண்டு மாதங்களில் ஸ்வர்ணம் நாட்டுப்பெண்ணுக்கு விதவிதமாகப் பூவைத்துப் பின்னிள்ை. நகைகள் பூட்டி அழகு பார்த்தாள். ஒரு வேலையும் செய்யவிடாமல் தான்ே எல்லா வ ற்றையும் கவனித்துக்கொண்டாள். சாதாரணமாகத் திருப்தி யடையும் மனமிருந்தால், மாமியாரின் இந்தச் சரளமான சுபா வத்தைப் புரிந்துகொண்டு சாவித்திரி ராஜாத்திமாதிரி இருந் திருக்கலாம். அந்த வீட்டுக்கு நாட்டுப்பெண்ஞ்கவும், பெண் ளுகவும் இருந்து அருமையோடு வாழ்ந்திருக்கலாம். ஆனால், லேசில் ஒருவரையும் நம்பும் சுபாவம் படைத்தவள் அல்ல சாவித்திரி. அவள் எதிரில் தங்கப் பதுமைபோல் வளையவரும் ஸரஸ்வதியைப் பார்த்தபோதெல்லாம் அவள் நெஞ்சு பொருமை யால் வெடித்துவிடும்போல் இருந்தது.

'இவளுக்கு என்ன இந்த வீட்டில் இவ்வளவு சலுகை?' என்று தன்னைக் கேட்டு அதற்கு விடை புரியாமல் தவித்தாள் சாவித்திரி; சதாகாலமும் முகத்தை உப்பென்று வைத்துக்கொண்டு கணவன் கேட்கும் வார்த்தைகளுக்குப் பதில் கூருமல் இருந்தாள் அவள்.

ஒர் இரவு கணவனும், மனைவியும் தனியாகச் சந்திக்கும் போது சாவித்திரியின் கண்கள் கோவைப் பழம்போல் அழுது சிவந்திருந்தன. திறந்த மாடியில் கைப்பிடிச் சுவரைப் பிடித்த வண்ணம் தொலைவில் தெரியும் ஆலயத்தின் கோபுரத்தைப் பார்த்தவாறு நின்றிருந்தாள் சாவித்திரி.