உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொறுமை 37

   அடிமேல் அடிவைத்து உள்ளம் சிலிர்க்க, தன்னை நாடிவரும் ரகுபதியை அவள் கவனிக்கவில்லை. மங்கிய நிலாவில் மனைவியின் முகத்தைத் திருப்பி அவன் பார்த்தபோது கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் போல் கன்னங்களில் உருண்டன. ஏன் சாவித்திரி அழுகிறாள்? பல குடும்பங்களில் இன்றும் நடக்கும் மாமியார், நாட்டுப் பெண் சண்டை தன் குடும்பத்தில் தோன்றிவிட்டதா என்று ரகுபதி ஐயுற்றான். பிறகு அன்புடன், "சாவித்திரி! ஏன் அழுகிறாய்?" என்று கேட்டு அவள் கண்ணீரைத் துடைத்தான்்.