உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ί Ο

வானம்பாடி'

அந்த இரவுக்கு அப்புறம் கணவனும் மனைவியும் பல முறை கள் தனிமையில் சந்தித் திருக்கிரு.ர்கள். ஆனால், மனம் விட்டுப் பேசவோ, அளவளாவவோ அவர்களுக்கு முடியவில்லை. கணவ னுக்கு உணவு பரிமாறும் போது சாவித்திரி அவன் முகத்தைப் பார்க்காமல் யாரோ அன்னியனுக்குப் படைப்பதுபோல் கலத்தில் பரிமாறிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு வெளியே சென்று விடுவாள். அவன் அவளை நிமிர்ந்து பா.ராமல் உண்டுவிட்டுப் போய்விடுவான். ஒரு தினம் தலைவாரிக்கொள்ள சாவித்திரியை அழைத்து சீப்புக் கேட்டபோது அவன் எதிரில் மேஜை மீது பட்’ டென்று சீப்பு வந்து விழுந்தது: "இந்தத் துணிகளை இன்று சோப்புப் போட்டுத் துவைக்க வேண்டும்' என்று அவன் தயங் கிக் கொண்டே யாரோ மூன்ருவது மனிதரிடம் சொல்லுவது போல் கூறிவிட்டு வெளியே போவான். மாலை வீடு திரும்பும் போது ஒவ்வொரு தினம் அவை துவைத்து அழகாக மடித்து வைக்கப்பட்டு இருக்கும். பல நாட்கள் அவை அவன் அறையில் ஒரு மூலையில் கேட்பாரற்றும் கிடப்பது உண்டு.

அத்தான்்! மாடியில் உன் அறைப்பக்கம் போனேன். துவைப்பதற்குத் துணி இருக்கவே துவைத்து மடித்து வைத்தேனே பார்த்தாயோ?" என்று ஸரஸ்வதி அவனைக் கேட்ட பிறகுதான்் அவைகளைத் துவைத்தது யார் என்பதும் அவனுக்குப் புரியும்.

படுக்கை அறையில் மேஜை மீது வைக்கப்பட் டிருந்த புத்தர் சிலே மீது துளசு படிந்து கிடக்கும். படங்களில் மலர் மாலைகள் வாடிக் கருகித் தொங்குவதைக் கவனிப்பதற்கு யாரும் இல்லை. பெரியவர்கள், "ஆணுக்குப் பெண் துணை' என்றும் 'பெண்ணுக்கு ஆண் துணை' என்றும் ஏன் ஏற்படுத்தியிருக்கிரு.ர்கள்? உடல் இன்பத்திற்காக என்றால் புனிதமான தாம்பத்ய உறவு அவசியம் இல்லை. ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உத்தியோக நிமித்தம் சென்றிருக்கும் கணவனின் சுக வாழ்வுக்காக மனைவி ஊரில் அவனேயே நினைத்துத் தவங்கிடந்து நோன்புகள் செய்வானேன்?