46 இருளும் ஒளியும்
தையிலிருந்து! ஒரு தரம் உங்கம்மா இருக்கும்போது . . . . என்று ஸ்வாதினமாகப் பழைய கதை ஒன்றை ஆரம்பித்தாள். 'உஸ் . . . . உஸ்' என்று ஸரஸ்வதி வெகு ஸ்வாதினமாக அத்தையின் வாயைப் பொத்திக் குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே, 'அம்மா இருக்கும்போது நான் செய்த விஷமங் களைக் கேட்டுக் கேட்டுக் காது புளித்துப் போய்விட்டது! அதெல்லாம் பழைய விஷயங்கள்! புது விஷயமாக ஒன்று சொல்லப்போகிறேன்' என்ருள் ஸரஸ்வதி.
சொல்லேன்! அதற்கு இவ்வளவு பீடிகை வேண்டுமா என்ன?' என்று கேட்டாள் ஸ்வர்ணம்.
ஸ்ரஸ்வதியின் முகத்தில் சிறிது முன்பு நிலவிய குறும்புச் சிரிப்பும் குறுகுறுப்பும் திடீரென்று மறைந்தன. நிலத்தைக் காலால் கீறிக்கொண்டே தரையைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். பிறகு நீர் நிறைந்த கண்க ளுடன், அத்தை ஸ்வர்ணத்தை ஏறிட்டுப் பார்த்து, 'அத்தை! என்னே அப்பாவிடம் அனுப்பிவிடு. நான் அவருடனேயே இனி மேல் இருந்துவிடுகிறேன்' என்ருள், பொங்கி வரும் துயரத்தை அடக்கிக் கொண்டு.
ஸ்வர்ணத்தின் கையில் இருப்பது கீதையானலும், அவள் இதுவரையில் கண்ணனின் உபதேச மொழிகளில் மனத்தை லயிக்க விட்டிருந்தாலும், அவள் ஒரு சாதாரண அஞ்ஞானம் நிரம்பிய பெண்மணி என்பதை அவள் வேதனே படரும் முகம் தெள்ளெனக் காட்டியது. ‘என்னை அப்பாவிடம் அனுப்பிவிடு' என்னும் வார்த்தைகள் அவள் மனத்தில் வேல்போல் பாய்ந்தன. அளவுக்கு மீறிய துயரத்துடன் ஸரஸ்வதியின் முகவாயைத் தன் கையால் பற்றிக்கொண்டு, 'ஏன் அம்மா ஸரஸு?' என்று கேட்டாள் ஸ்வர்ணம். கையில் தாங்கி இருக்கும் ஸரஸ்வதியின் முகத்தில் பல வருஷங்களுக்கு முன்பு இறந்துபோன தன் மத னியின் பரிதாபமான முகம் தோன்றி மறைவதுபோல் இருந்தது ஸ்வர்ணத்துக்கு.
தங்கப் பதுமைபோல் மாலையும், கழுத்துமாய் ஸரஸ்வதியின் தாய் நேற்றுதான்் ஸ்வர்ணத்தின் தமையனைக் கைப்பிடித்து வீட்டில் நுழைந்ததுபோல் இருக்கிறது. அதற்குள்ளாக ஒரு பெண்ணைப்பெற்று, திக்கில்லாமல் விட்டுவிட்டு ப் போய் விட்டாள். அவளுக்குத்தான்் ஸ்வர்ணத்தினிடம் எவ்வளவு அன்பு: நாத்த ஞரும் மதனியும் கூடப்பிறந்த சகோதரிகள்