இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
48 இருளும் ஒளியும்
ஸ்வர்ணத்திற்கு சுணப்பொழுதில் எல்லாம் விளங்கிற்று. வலரஸ்வதி அந்த வீட்டில் இருப்பதனுல் சாவித்திரியும் ரகுபதி யும் மனஸ்தாபப்படுகினர்களா? இதென்ன விந்தை கபடமற்ற இந்தப் பேதைப் பெண்ணேப் பார்த்துச் சாவித்திரிக்கு இரக்கம் தோன்ரு மல் பொருமை ஏற்பட்டிருப்பதும் ஆச்சர் யந்தான்். ஸ்வர்ணம் கண்ணிர் பெருகச் செயலிழந்து உட்கார்ந்திருந்தாள். அத்தையின் தோளில் முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு ஸரஸ்வதி கண்ணிர் உகுத்தாள்.
வான வெளியில் மனம் போனபடி ஆடிப் பாடிப் பறந்து செல்லும் வானம்பாடியைப் பிடித்து யாரோ கூட்டில் அடைத்துச் செய்யுளும், இலக்கணமும் கற்றுக்கொடுக்கும் கட்டுப்பாடான நிலையை அடைந்து ஸரஸ்வதியின் மனம் வேதனையுற்றது. ஒருவருக்காக அவள் தன் சங்கீதக் கலையை அப்யசிக்காமல் விட்டு விடவும் மனம் ஒப்பவில்லே.