உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினே யும் கண் ဆေါ”og ம் 5.I.

விட்டில் நடக்கும் விஷயங்களுக்கும் எவ்வித சம்பந்த மும் இல்லே போல் பாவித் திருக்கும் சாவித்திரி, வினே யைப் பார்த்துக்கொண் டிருந்த எபரஸ்வதியின் பக்கம் திரும்பி அவளே வெட்டுவதுபோல் ஒரு பார்வை பார்த்துவிட்டு மறுபடியும் நிலத்தில் கோல மிட ஆரம்பித்தாள். யாராவது ஒருவர். "இந்த வினை எதற்கு வாங்கிளு ய்?' என்று கேட்பார்கள் என்று ராகுபதி எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தான்். அந்த வினே எதற்காக, யாருக்காக வாங் கப்பட்டது என்கிறதை அவளுகவே சொல்லித்தான்் ஆகவேண்டும் என்கிற நிலைமை ஏற்பட்டவுடன் ரகுபதி தன் தாயைப் பார்த்து, 'அம்மா! இன்று வல்ல நாள க இருப்பதால் டவுனுக்குப்போய் இந்த வினையை வாங்கி வந்தேன், சாவித்திரிக்கு இருக்கட்டு மென்று. வெள்ளிக்கிழமையாகவும் இருக்கிறது. இன்றே பாடமும் ஆரம்பிக்கலாம். எ ன் ன .תעהraruי 5יסר" என்று ஸ்ரஸ்வதியைப் பார்த்துக் கேட்டுவிட்டுத் தன் மனைவியை நோக்கிப் புன்னகை புரிந்தான்்.

சாவித்திரி கோபம் பொங்கும் முகத்துடன் கணவனைத் 'துரு துரு" வென்று விழித்துப் பார்த்துவிட்டு அசட்டையுடன் முகத்தைத் திருப்பிக்கொண்டு பதில் எதுவும் கூருமல் உட்கார்ந் திருந்தாள். கையில் வைத் திருந்த வினையைக் கீழே வைத்து விட்டு ஸரஸ்வதி நிதான்மாக, 'இன்றைக்கே என்ன அவசரம் அத்தான்்? ஆகட்டுமே: இன்ஞெரு நாள் ஆரம்பித்தால் போகிறது' என்ருள்.

'அவசரம் ஒன்று மில்லை. நாள் நன்ருக அமைந்திருக்கிறது. நான் கேட்பதற்கு முன்பே கடைக்காரர்களும், புதுசாக வினை தஞ்சாவூரிலிருந்து வந்திருக்கிறது. ஸார்: வேண்டுமானல் எடுத்துப் போங்கள்' என்று கையில் கொடுத்தார்கள்' என்று கூறிவிட்டுத் தன் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் உட்கார்ந்திருக்கும் மனேவியின் முகத்தை மறுபடியும் பார்த்தான்் ரகுபதி.

ஏதோ அலுவலாகச் சற்றுமுன் சமையலறைக்குச் சென்று காய்ச்சிய பாலே இறைவனுக்குப் படைப்பதற்காக எடுத்து வந்த ஸ்வர்ணம், மகன் கூறுவதைக் கேட்டுவிட்டு, 'அவன் இண்டப்படி தான்் இன்றைக்குப் பாட்டு ஆரம்பியேன். இதற்குப்போய் இவ்வளவு தர்க்கம் வேண்டியதில்லையே! யாராவது ஒருத்தர் தாழ்ந்து போய்விட்டால் ஆயிற்று' என்று கூறிவிட்டுப் பாலைக் கீழே வைத்துவிட்டு உட்கார்ந்தாள்.