உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பதிப்புரை

ஸ்ரீ சரோஜா ராமமூர்த்தி அவர்கள் எழுத்துலகில் எல்லோருக்கும் நன்கு பரிச்சயமானவர். சிறுகதைகள் எழுதுவதில் இவர் திறமையை தமிழ் வாசகர்களெல்லாம் அநுபவித்து மகிழ்ந்திருப்பார்கள். 'நவராத்திரிப் பரிசு' என்ற இவர் சிறு கதைத் தொகுதியில் உள்ள கதைகளே ரஸிகர்கள் அநுபவித்திருப்பார்கள்.

தப்பபிப்பிராயத்தினாலும் அசூயையினாலும் ஒருவர் வாழ்க்கையே கெட்டுப் போகும் என்பதைக் காட்ட எழுந்த இந்த 'இருளும் ஒளியும்' என்ற நாவல் பெண்மணி ஒருத்தி தன் அன்பு காரணமாக எவ்வளவு தியாகங்களைச் செய்ய முடியும் என்பதையும் நன்கு காட்டுகிறது. அழகிய எளிய ஜீவன் ததும்பும் நடையில் அமைந்த இந்த நாவல் ரசிகர்களுக்கு இன்பூட்டு மென்று நாங்கள் நம்புகிறோம்.

சென்னை 4,
15—11—56.
பதிப்பாளர்.