பக்கம்:இருளும் ஒளியும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 இருளும் ஒளியும்

என்னே எங்கள் ஊருக்கு ரெயில் ஏற்றிவிடுகிறிர்களா?' என்று கேட்டாள். ரகுபதியின் கோபம் அதற்குள் முற்றிலும் தனிந்துவிட்டது. அவன் புன்சிரிப்புடன் அவள் கைக: ப் பற்றிக்கொண்டு. 'சாவித்திரி! அடித்துவிட்டேன் என்று கோபமா உனக்கு அடிக்கிற கை, அணைப்பதும் உண்டு என்பதை நீ தெரிந்துகொள்ளவில்லையே! உன்ன ஊருக்கு அனுப்பிடைடு. நான் தனியாக இங்கே இருக்கமுடியுமா சொல்?' என்டின்.

சாவித்திரி அவன் பிடியிலிருந்து தன் கைகளே உதறி விடுவித்துக்கொண்டாள். பின்பு அவனை ரோஷத்துடன் நிமிர்ந்து பார்த்து, 'உங்களால் ரெயில் ஏற்றிவிடமுடியுமா, முடியாதா என்பதைச் சொல்லுங்கள்! வேறு எந்த ராமாயணமும் எனக்கு வேண்டாம்!' என்று கூறிவிட்டு வழக்கம்போல் போர்வையை உதறிப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள்.

அதே சமயத்தில் சமையலறையில், சாப்பாட்டுக்கு அப்புறம் ஸ்வர்ணமும், ஸரஸ்வதியும் மெதுவான குரலில் பேசிக்கொண் டிருந்தார்கள்.

என்னம்மா ஸ்ரள இப்படிப்பட்ட சண்டியாக வந்து வாய்த்திருக்கிறதே' என்று ஸ்வர்ணம் கவலையுடன் கேட்டாள் ஸ்ரஸ்வதியை. +

ஸரஸ்வதியின் மனதில் வேதனை நிரம்பியிருந்தது. முகத்தை ஒரு தினுசாக அசைத்து அவள், 'இந்த அத்தான்ிடமும் தவறு இருக்கிறது. அத்தை, அவள் இஷ்டப்படி இருந்துவிட்டுப் போகட்டுமே!' என்ருள்.

ஸ்வர்ணம் பழைய நாளைய மனுவி. புருஷன் சொல்லி மனேவி கேட்டு பக்தியுடன் நடந்து கொள்ளவேண்டும் என்கிற பண்பாட்டில் ஊறிப்போனவள். அத்துடன் தன் செல்லப் பிள்ளேயின் மனம் நோகும்படி எதிர்த்துப் பேசிய சாவித்திரியிடம் அவளுக்கு அடங்காத கோபம் ஏற்பட்டிருந்தது. -

'நாளேக்கு. ஊரில் போய் இல்லாததையும், பொல்லா ததையும் சொல்லி, நமக்குக் கெட்ட பெயர் வாங்கிவைக்குமோ என்னவோ இந்தப் பெண் இப்படி ஒரு பிடிவாதமா ஒரு பெண் னுக்கு!' என்று அதிசயப்பட்டாள் ஸ்வர்ணம்.

என்னவோ போ அத்தை! எனக்குத் தெரிந்ததை நான் சொல்லுகிறேன். இதையெல்லாம் பார்த்தால் எனக்குப் பயமாக இருக்கிறது' என்று பயந்த மனத்துடன் கூறினுள் ஸ்ரஸ்வதி.