உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* -- * * –

விட்டு ககு

அடுத்த நாள் அதிகாலையில் சாவித்திரியை ரெயில் எற்றுவதற்காக .ינה. (עr மனத்துடன் ரகுபதி அவளுடன்

வண்டியில் ஏறி உட்கார்ந்தான்். பெரிய நகரமாக இருந்தால் ஒருவர் வீட்டில் நடக்கும் விஷயங்களே இன்னொருவர் அவ்வள வாகக் கவனிக்கமாட்டார்கள். அந்த ஊர் சற்றுக் கிராமாந்தர மாக இருக்கவே அண்டை அயலில் இருக்கும் பெண்கள் வாசலில் கோலமிட வந்தபோது அதிசயத்துடன் கோலத்தைப் பாதியில் நிறுத் திவிட்டு ஸ்வர்ணத்தின் வீட்டு வாசலில் வண்டி நிற்பதைக் கவனித்தார்கள். சாவித்திரியும் ரகுபதியும் வண்டி ஏறுவதற்கு முன்பு கசமசவென்று ஏதோ பேசப்படுவதையும் கேட்டார்கள். திடுமென்று நாட்டுப்பெண் ஊருக்குப் போவதை ஸ்வர்ணம் துளிக்கூட விரும்பவில்லை. ' எங்கள் நாளில் இப்படியா இருந்தோம்? புருஷன் ஏதோ கோபித்துக்கொண்டு அடிக்கிறதும் உண்டு. இரண்டு நாள் புருஷைேடு பேசாமல் இருப்போம். அப்புறம் சமாதான்ம் ஆகிப் பேசுகிறதில் எவ்வளவு இன்பம் என்பதைச் சொல்லவே முடியாது. அதையெல்லாம் பாராட்ட லாமா?' என்று சொல்லி மாய்ந்துபோளுள்.

புருஷன், மனைவியை அடிக்கிறது தவறு அத்தை! உனக்கு. இந்தக் காலத்து விஷயமே தெரியவில்லை. நீ என்னவோ அந்த நாளைப்பற்றியே பேசிக்கொண்டு இருக்கிருயே!' என்று ஸ்ரஸ்வதி கோபித்துக்கொண்டாள்.

கணவனும், மனேவியும் ரெயில் நிலையத்தை அடையும். வரையில் ஒருவரோடொருவர் பேசவில்லை. ரெயில் நிலையத் தினுள் அதிகக் கூட்டமில்லாமல் இருக்கவே ரகுபதி சாவித் திரியின் அருகில் நெருங்கி, 'இப்பொழுதாவது கோபம் தணிந்து விட்டதா? திரும்பி விட்டுக்குப் போய்விடலாமா? இல்லை, டிக்கெட் வாங்கித்தான்் வரவேண்டுமா?' என்று குறும்புச் விரிப்புடன் கேட்டான்.

'இது என்ன விளையாட்டு அழுகிற குழந்தைக்கு மிட்டாய் ாைங்கித்தருகிற மாதிரி குழைந்து குழைந்து என்ன பேச்சு