பக்கம்:இருளும் ஒளியும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 இருளும் ஒளியும்

வேண்டிக்கிடக்கிறது? ரெயில் வந்துவிட்டால் தம் தர்க்கத்தை ர வித்துக்கொண்டு நிற்காது! பேசாமல் போய் டிக்கெட் வாங்கி வாருங்கள்' என்று சாவித்திரி கோபத்துடன் பொரிந்து தள்ளிளுள்.

ரகுபதியின் மனத்தை ஊசியால் நறுக் கென்று குத் துவது போல் அவள் வார்த்தைகள் தைத்தன. அவன் வேறெதுவும் பேசாமல் டிக்கெட் டை வாங்கி வந்து அவளிடம் கொடுப்பதற்கும் ரெயில் வருவதற்கும் சரியாக இருந்தது. கணவன். மனைவி என்கிற பந்தம் எவ்வளவு நெருங்கியதாக இருந்தாலும் சாவித்திரிக்கும் ரகுபதிக்கும் ஏற்பட்டிருந்த பிளவு அசாதாரண மாகத்தான்் இருந்தது. ஜன்னலின் மீது கையை ஊன்றி முகத்தைச் சாய்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் சாவித்திரியின் வெகு சமீபத்தில் பெட்டிக்கு வெளியேதான்் ரகுபதி நின்றிருந் தான்். இருந்தாலும் அவர்கள் இருவரின் மனங்களும் வெவ் வேறு துருவங்களைப் பார்த்துக்கொண் டிருந்தன. ரெயிலின் 'கார்டு தன் ஊதலை எடுத்து ஊதிக் கொடியைப் பறக்கவிட்டு ஆட்டினர். திக்கித் திணறி ரகுபதி, 'ஊருக்குப் போனதும் கடிதம் போடு' என்ருன், சாவித்திரி மெளனமாகத் தலையை அசைத்தாள்.

மனைவியை ரெயில் ஏற்றிவிட்டுக் கால் நடையாகவே திரும்பி ாகுபதி வீட்டுக்கு வரும்போது பலமுறை அவன் மனம் அவனையும் அறியாமல் சாவித்திரியையும், ஸரஸ்வதியையும் ஒப்பிட்டுப் பார்த்தது. இப்பொழுது நடந்ததுமாதிரி இருந்தது அவனுக்கு அந்தச் சம்பவம். ஒரு நாள் லரஸ்வதியை - அவ ளுக்குப் பன்னிரண்டு வயசாக இருக்கும்போது - ஏதோ ஒரு பாட்டைப் பாடச் சொல்லி வற்புறுத்தினன் ரகுபதி. ஒடி விளையாடும் பருவத்தில் மணிக்கணக்காக உட்கார்ந்துப் பாடிப் பாடி அலுத்துவிட்டது அவளுக்கு. ஆகவே சற்றுக் கோபத் துடன். 'போ அத்தான்்! உனக்கு இது ஒரு பைத்தியம்! என்னலே இனிமேல் பாட முடியாது போ' என்று கூறி எழுந்து சென்ற ஸரஸ்வதியின் பறக்கும் மேலாக்கைப்பற்றி ரகுபதி இழுத்தபோது அது கிழிந்துபோய்விட்டது.

புத்தப் புதுசையெல்லாம் கிழித்துவிடுகிருயே அத்தான்்!' என்று இரைந்தாள் ஸரஸ்வதி.

கத்தாதே இப்படி ராக.சி மாதிரி!' என்று அவள் கொவ்வைக் கன்னங்களை அழுத்திக் கிள்ளிவிட்டான் ரகுபதி.