பக்கம்:இருளும் ஒளியும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 5

மாலே மணி வண்ணு '

பல நாள் முயற்சியின் பேரில் ரகுபதி அந்த ஊரில் ஒரு சிறு சங்கீத மண்டபம் கட்டி முடித்திருந்தான்். அதன் இறப்புவிழாவை அவன் வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்றும் தீர்மானித்திருந்தான்். மனேவியுடன் வெகு உற்சாகமாக அவன் அந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்பியதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனால், பிறந்தகம் சென்ற சாவித்திரி மூன்று மாதங்களாகியும் அவனுக்கு ஒரு கடிதங்கூடப் போடாததை நினைத்துத்தான்் அவன் மனம் சதா ஏங்கிக்கொண் டிருந்தது. செளக்கியமாக ஊர் போய்ச் சேர்ந்தேன்' என்று கடிதம் போடும்படி அன்று ரெயிலடியில் அவளிடம் தான்் கேட்டுக்கொண்டும் அவள் தன்னை மதிக்க வில்லையே என்று ரகுபதி எண்ணி வருந்தாத நாளில்லை. ஆசை யுடன் வாங்கிவந்த வீணை அவன் அறையில் ஒரு மூலையில் கேட்பாரற்றுத் துளசி படிந்து கிடந்தது. அன்று நடந்த ஒரு சிறு சம்பவம் மனைவியையும் கணவனையும் பிரித்து எவ்வளவு பெரிய பிளவை ஏற்படுத்திவிட்டது! குடும்ப வாழ்க்கையில் இன்பமும், அமைதியும் நிலவ வேண்டிய நாட்களில் மன அமைதி குறைந்து வாழ்க்கையில் கசப்பல்லவா ஏற்பட் டிருக்கிறது? ---

மன நிம்மதியை இழந்த ரகுபதி தன் அறைக்குள் மேலும் இழுமாக உலாவிக்கொண்டே சிந்தனையில் மூழ்கி இருந்தான்். எதிரே மேஜைமீது திறப்பு விழாவுக்காக அனுப்ப வேண்டிய அழைப்பிதழ்கள் வைக்கப்பட் டிருந்தன. தான்் நடத்தப் போகும் இந்த விழாவைக் குறித்துத் தன் மாமருைக்கும் அன்றைய தபாலில் நான்கு வரி ஒரு கடிதம் எழுதிப் போட் டிருந்தான்். அதில் அவரைக் கட்டாயம் வரவேண்டும் என்றும் எழுதி இருந்தான்். ஒருவேளை பெண்ணைச் சமாதான்ப்படுத்தி அவர் அழைத்து வந்தாலும் வரலாம் அல்லவா? சாவித்திரி தன் தகப்பனருடன் வந்துவிட்டால் பழைய விஷயங்களை