மாலே மணி வண்ணு ! » 69
"அவருக்கு இன்றுதான்் ஒரு கடிதம் எழுதிப்போட்டேன்' -வரட்சியுடன் பதிலளித்த மகனின் முகத்தைப் பார்த்ததும் ஸ்வர்ணத்தின் மனம் உருகியது. இப்படிச் செய்வதுதான்் நல்லது. இதுதான்் உடம்புக்கு ஒத்துக்கொள்ளும். நான் சொல்வதை நீ கேட்டுத்தான்் ஆகவேண்டும்' என்று குழந்தை யில் அதட்டித் திருத்தி அவள் வளர்த்த மகன்தான்் ரகுபதி. இருந்தாலும், இன்று அவன் மனத்துக்கு நல்லது கெட்டது தெரிந்திருக்கிறது. அதிகமாக அவனை ஒன்றும் சொல்ல முடிய வில்லை. அப்படிச் சொல்லித் திருத்துவதற்கும் பிரமாதமாகத் தவறு ஒன்றும் அவன் இழைத்துவிடவில்லை. இந்தப் பிளவுஇந்த வைராக்கியம்-ஒரு வேளை நீடித்து நிலைத்துவிடுமோ? அப்படியால்ை, அவள் ஒரே மகன் வாழ்க்கை முற்றும் இப்படித் தான்் ஒண்டிக் கட்டையாக நிற்கப்போகிரு?ை ஸ்வர்ணத்தின் நெஞ்சை யாரோ கசக்கிப் பிழிவது போன்ற வேதனையை அது பவித்தாள். பெற்ற அன்னை மகனைப் பாலூட்டி, சீராட்டி வளர்க்கிருள். அவன் அறிவுபெற அரிய கதைகளை மனதில் பதியும்படி கூறுகிருள். பள்ளிக்கு அனுப்புகிருள்: அவன் கல்வியில் தேர்ந்து பட்டம் பெற்று வரும்போது திருஷ்டி கழிக்கிருள். பொங்கிப் பூரிக்கிருள். அவனுக்கு ஆசையோடு மனம் முடித்து வைத்துப் பேரன் பேத்தியோடு குலம் தழைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிருள். நடுநடுவில் குடும்பங்களில் சிறு பூசல்கள் எழலாம். மாமியாரும், மரு மகளும் சண்டை போட்டுக்கொண்டு விலகி வாழலாம். இவை தினமும் நடக்கின்றன. பார்த்துக் கொண்டுதான்் இருக்கிருேம். ஆகுல், மகன் நல்வாழ்வு வாழவேண்டும் என்று எண்ணிய அன்னையின் உள்ளத்தில் அந்த ஆசை, சண்டை - பூசல்களுக் கிடையில் நிலைத்துத்தான்் இருக்கும். அதன் முன்பு மற்றச் சிறு வியவகாரங்கள் மறைந்து போகின்றன: தெளிந்த கங்கையில் கழுவப்படும் மாசு மறுக்களைப்போல! *
கீழே கூடத்தில் கலகலவென்று சிரித்துக்கொண்டே நாலைந்து பெண்கள் வந்தார்கள்.
"ஸரஸ்வதி! புது சங்கீத மண்டபத்தில் உன்னுடைய கச்சேரியாமே! என்ன பாட்டுகள் பாடப் போகிருயடி?' என்று ஒருத்தி கேட்டாள்.
'அதெல்லாம் முன்னடி சொல்லுவாளா? நாளைக்கே பெரிய பாடகியாகி "தேசிய நிகழ்ச்சி"யில் பாடிலுைம்