1 G
சந்துருவும் சாவித்திரியும்
அன்று காலே தபால் சாரன் கொண்டுவந்து கொடுத்த "அழைப்பிதழ்', ராஜமையர் விட்டில் மேஜை மீது கிடந்தது. கையில் நூலும், ஊசியும் வைத்துக்கொண்டு சிதா சவுக்கம் பின்னிக்கொண் டிருந்தான்். - நொடிக்கொருதரம் அவள் கண்கள் அழைப்பிதழை நோக்கி மலர்ந்தன. பூரீமதி சரஸ்வதி வாய்ப் பாட்டும், வீணையும்" என்று தங்க நிற எழுத்துக்களில் அச்சடித்தி ருக்கும் வார்த்தைகளைத் திருப்பித் திருப்பிப் படித்தாள் சீதா. சாவித்திரி மட்டும் ஒற்றுமையுடன் அவர்களிடையே இருந்தால் இன்று சீதா அந்தக் கடிதத்தைப் பார்த்துவிட்டுத் துள்ளிக் குதித்திருப்பாள். கட்டாயம் சென்று ஸரஸ்வதியின் இன்னிசை யைக் கேட்க வேண்டும் என்று விட்டில் ஆர்ப்பாட்டம் செய்தி ருப்பாள். காலேயில் கடிதம் வந்ததும் காரியாலயத்துக்குப் போவதற்கு முன்பு ராஜமையர் . தை அலட்சியத்துடன் பார்த்து விட்டு, மேஜை மீது பொத் தென்று வீசி எறிந்தார். அவருக்கு மாப்பிள்ளையிடம் ஏற்பட்டிருந்த கோபத்தை ஒருவாறு புரிந்து கொண்டாள் சீதா. அவருக்குப் பிரத்தியேகமாக ரகுபதி எழுதி இருந்த கடிதத்தைப் படித்தபோது அவர் முகம் "கடுகடு வென்று மாறியது.
'இந்தத் திறப்பு விழாவுக்குத் தாங்கள் வந்திருந்து அவசியம் நடத்திவைக்க வேண்டும். அங்கு எல்லோரும் செளக்கியம் என்று நம்புகிறேன்.'
சாமர்த்தியமாக எழுதப்பட்ட கடிதம் என்றுதான்் அவர் நினைத்தார்: சாவித்திரியைப்பற்றி விசாரித்து ஒன்றும் எழுத வில்லை. அவள் எப்பொழுது வரப்போகிருள் என்றும் கேட்க வில்லை. எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் பெண்ணைப் பெற்றவரிடமே பெண்ணைப்பற்றி ஒரு வார்த்தைகூடப் பிரஸ் தாபியாமல் அவளுக்கும் தனக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தின் காரணத்தை விளக்காமல்-வருமாறு அழைத்திருப்பான் என்று அவர் உள்ளத்தில் அனல் கனன்றது: