பக்கம்:இருளும் ஒளியும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"74 ■ இருளும் ஒளியும்

ஏன் கூட்டி வந்தீர்?' என்று கேட்டால் முகத்தை எங்கே திருப்பிக்கொள்கிறதடி?'

கோபத்தில் இப்படி இரைந்துவிட்டு அவசர அவசரமாக வெளியே போய்விட்டார் ராஜமையர். மங்களம் கண்களில் நீர் தளும்ப பிரமித்துப்போய் நின்றிருந்தாள். வெளியே செல்வதற் காக அங்கு வந்த சந்துரு, தாயின் குழப்பமான நிலையை அறிந்து அவள் அருகில் வந்து நின்று, என்னம்மா விஷயம்?' என்று கேட்டான். மேஜை மீது கிடந்த அழைப்பிதழில் கொட்டை எழுத்துக்களில், ரீமதி ஸரஸ்வதி-வாய்ப்பாட்டும்வினையும்' என்று எழுதி இருந்தது பளிச்சென்று தெரிந்தது. 'அம்மா லரஸ்வதி முதன் முதலாகக் கச்சேரி செய்யப் போகிருளாமே. நன்முகப் பாடுவாள் அம்மா' என்ருன் சந்துரு சந்தோஷம் தாங்காமல்.

ஸ்ரஸ்வதியின் பெயரைக் கேட்டாலே அகமும் முகமும் மலர்ந்து நிற்கும் சந்துருவின் மனதை ஒருவாறு புரிந்து கொண்டாள் மங்களம். இருந்தாலும் அதை வெளிக்குக் காட்டிக்கொள்ளாமல், 'எல்லாம் ரொம்ப விமரிசையாகத்தான்் நடக்கும்போல் இருக்கிறது. நாம்தான்் ஒன்றுக்கும் கொடுத்து வைக்கவில்லை' என்ருள் மங்களம்.

இதுவரையில் தோட்டத்தில் ஏதோ அலுவலாக இருந்த சாவித்திரி உள்ளே வந்தபோது, தாயாரும், தமையனும், தங்கையும் ஏதோ கூடிப் பேசுவதைக் கவனித்துவிட்டு அருகில் வந்து நின்று, ' என்ன அது பிரமாதமான ரகசியம்? கூடிப் பேசுகிறீர்களே?' என்று கேட்டாள்.

சந்துரு அவளுக்குப் பதில் கூருமல் மேஜை மீது கிடந்த அழைப்பிதழை எடுத்து அவளிடம் கொடுத்தான்்.

சாவித்திரியின் முகம் கடின காலத்தில் வெளுத்து வாடியது. பிறகு சரேலென்று 'ஜிவு ஜிவு வென்று சிவந்தது. ஆத்திரத் துடன் கடிதத்தை எடுத்துச் சுக்கு நூருகக் கிழித்துப்போட்டு, 'பூ! இவ்வளவுதான்? கச்சேரி செய்ய வேண்டியது ஒன்றுதான்் பாக்கியாக இருந்தது. அதுவும் ஆரம்பமாகிவிட்டதாக்கும்!" என்று அதைத் துாள்து.ாளாகக் கிழித்து எறிந்தாள் எரிச்சலுடன். அழகிய எழுத்துக்களில் 'பூரீமதி ஸரஸ்வதி என்று எழுதி இருந்த வார்த்தைகள் துண்டு துண்டாகச் சிதறிக் கூடத்தில் இறைந்து கிடப்பதைப் பார்க்க மனம் சகிக்காமல் சந்துரு சாவித்திரியைக் கோபத்துடன் விழித்துப் பார்த்துவிட்டு

அங்கிருந்து வெளியே சென்ருன்.