பக்கம்:இருளும் ஒளியும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 or விருக்கிற கா? y 77

'வர வர உனக்கு வாய் அதிகமாகிவிட்டது. தான்் இருக்கிற சவரனைக்கு என்னைப் பார்த்துப் பரிகாசம் பண்ணுகிருயே. சாவித்திரி என்னுடன் இருந்ததே ரொம்பக் காலம்! அதிலும் அவள் எனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்று என் மனத்தை அறிந்து உபசாரம் செய்தது அதைவிட அதிகம்! சமையலறையி . ருந்து அம்மாவோ நீயோ காய்ச்சி வைத்த பாலே எனக்குக் கொண்டு வந்து கொடுக்கும் அழகையே கன்னிப் பெண்கள் பார்த்துப் பாடம் படிக்கவேண்டும். கடன் இழவே" என்று பாலைக் கொண்டு வந்து மேஜை மீது மூடாமல் வைத்துவிட்டுப் போர்வையை இழுத்துப் படுத்துக்கொள்ளத்தான்் தெரியும் அவளுக்கு. இன்பமும், ஆனந்தமும் நிறைந்திருக்க வேண்டிய அறையில் அழுகையின் விம்மலும், "படபட"வென்று பொரிந்து வெடிக்கும் கடுஞ்சொற்களையும்தான்் கேட்கலாம். என் படுக்கை அறைச் சுவர்களுக்கு வாய் இருந்தால், நான் ரசித்த காட்சியை அவைகளும் வர்ணிக்குமே, ஸரஸ-1' என்ற ரகுபதியின் கண்கள் கலங்கிவிட்டன. ஸ்ரஸ்வதியின் நெஞ்சைப் பிளந்துகொண்டு விம்மலின் ஒலி எழுந்தது. பிறர் துன்பத்தைத் தன்னுடைய தாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும்' என்று பெரியவர்கள் சொல்லுகிரு.ர்கள். ஸரஸ்வதிக்குத் தன் அத்தான்ின் துன்பத் துக்கு எப்படிப் பரிகாரம் தேடுவது. அதைத் தான்் எப்படிப் பகிர்ந்துகொள்வது என்பதே புரியவில்லை. சிறிது நேரம் அவள் யோசித்துவிட்டு, மெதுவாக, 'அத்தான்்! நான் ஒன்று சொல்லு கிறேன் கேட்கிருயா? ஒருவருக்கும் தெரியாமல் நீ போய் சாவித்திரியை அழைத்து வந்துவிடு. அத்தைக்குக்கூடத் தெரிய வேண்டாம். என்ன இருந்தாலும் அவள் அந்த நாளைய மனுவி. ஏதாவது சொல்லுவாள்' என்ருள்.

ரகுபதியின் கலங்கிய கண்களில் வைராக்கியத்தின் ஒளி வீசியது.

"அழகாகப் பேசுகிருயே ஸரஸு? தவறு செய்தவன் நானுக இருந்தாலும் அதற்காக அவளிடம் மனம் வருந்தி இங்கிருந்தபோதே அவளைப் போகவேண்டாம் என்று தடுத்துப் பார்த்தேன். ஊருக்குப் போன பிறகு கடிதம் போடும்படி வற்புறுத்திச் சொன்னேன். எனக்கு யார்பேரிலும் வருத்த மில்லை என்று தெரிவிக்க என் மாமருைக்கு அழைப்பு அனுப்பிக் கடிதமும் போட்டிருக்கிறேன். இனியும் நான் போய் அவளே வேண்ட வேண்டுமென்று விரும்புகிருயே. மனிதனுக்குச் சுய