உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

அந்தப் பெண் யார் ? .

திறப்பு விழாவுக்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு ரகுபதியின் அத்தை அலமேலு திடுதிப் பென்று கிராமத்தி லிருந்து வந்து சேர்ந்தாள். ஒற்றை மாட்டு வண்டியில் மூட்டை முடிச்சுகள் சகிதம் அவள் வந்து இறங்கியதுமே ஸ்ரஸ்வதிக்கு 'அலமு. அத்தை வெறுமனே வரவில்லை; வெறும்வாயை மெல்லுகிற வளுக்கு ஒரு பிடி அவல் கிடைத்த சமாசாரமாக வம்பை அளக்க வந்திருக்கிருள்' என்பது புரிந்துவிட்டது. 'அத்தை! அத்தை! உன் நாத்தனர் வந்திருக்கிருரே. இனிமேல் நீ இதுவரையில் ஒருத்திக்கும் பயப்படாமல் இருந்த மாதிரி இருக்க முடியாது: விட்டு விஷயங்களே மூடி மூடி ரகசியமாகவும் வைத்துக்கொள்ள முடியாது. அலமு. அத்தை இருப்பிது கிராமமாக இருந்தாலும் "ஆல் இந்தியா ரேடியோ'வுக்குச் செய்திகள் எட்டுவதற்கு முன்டே அவளுக்கு எட்டிவிடும் தெரியுமா?’ என்று பின் கட்டுக்கு விரைந்து விஷயத்தை அறிவித்தாள் ஸ்ரஸ்வதி. ஸ்வர்னம் ஸரஸ்வதியின் கன்னத்தில் லேசாகத் தட்டி, 'அடி பெண்ணே! இன்னும் நீ குழந்தையா என்ன? வாயைத் திறக்காமல்தான்் கொஞ்சம் இரேன். வாயும் கையும் பரபர வென்று ஏன்தான்் இப்படி இருக்கிருயோ?' என்று கடிந்துகொண்டே நாத்தளுரை வரவேற்கக் கூடத்துக்கு வந்தாள்.

வண்டியிலிருந்து இறங்கிய நாலைந்து தகர டப்பாக்கள், புடைவையில் கட்டப்பட்ட மூட்டை ஒன்று, சிறிய பிரம்புப் பெட்டி இவைகள் புடைசூழ அலமு காலை நீட்டிக்கொண்டு கூடத்தில் உட்கார்ந்து சாவித்திரியும் - ரகுபதியும் கல்யாணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். நடையில் கதவுக்கு அருகில் சற்று ஒதுங்கி பயத்துடன் நின்றுகொண் டிருந்த ஒரு பெண்ணே அதுவரையில் யாரும் கவனிக்கவில்லை. அலமு. அத்தை வண்டியிலிருந்து இறங்குவதைப் பார்த்ததுமேதான்் ஸரஸ்வதி பின்கட்டுக்கு விஷயத்தை அறிவிக்க ஓடிவிட்டாளே? தயக்கத்துடன் அந்தப் பெண்ணைப் பார்த்து ஸரஸ்வதியும், ஸ்வர்ணமும், 'உள்ளே