உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:80 இருளும் ஒளியும்

வாயேன் அம்மா' என்று அழைத்தார்கள். அவர்கள் அழைத் ததைக் கேட்டவுடன் அலமு முகத்தைத் திருப்பி நடை ப்பக்கம் பார்த்துவிட்டு, 'இதென்னடி இது அதிசயம்? உள்ளே வாயேன், தங்கம். கல்யாணப் பெண் மாதிரி ஒளிந்துகொண்டு நிற்கிருயே: என்று அதட்டலுடன் அவளைக் கூப்பிட்டாள். பதிறுைபதினேழு வயது மதிக்கக்கூடிய அந்தப் பெண் பயந்துகொண்டே உள்ளே வந்து அத்தை அலமுவின் பக்கம் உட்கார்ந்துகொண் டாள். அலமுஅத்தை சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்திலிருந்து: கண்களே ஒரு சுழற்றுச் சுழற்றி ரகுபதியின் மனைவி எங்கே இருக்கிருள் என்று அறிவதற்காகக் கூடத்தை ஒரு கோடி பிலிருந்து மறு கோடிவரைக்கும் ஆராய்ந்தாள். சாவித்திரி புக்ககத்தில் கோபப்பட்டுக்கொண்டு பிறந்தகம் சென்றிருக்கிருள் என்பதும் அவளுக்கு அரைகுறையாக எட்டியிருந்தது.

'உன் நாட்டுப்பெண்ணை எங்கே காளுேம்?" என்று கேட்டுக்கொண்டே முட்டை முடிச்சுகளைப் பிரித்து எடுக்க

ஆரம்பித்தாள். : 'பிறந்தகத்துக்குப் போயிருக்கிருள். எழுந்திருங்களேன். ஸ்நானம் செய்து சாப்பிடலாம்' என்று ஸ்வர்ணம் பேச்சை மாற்றி அவர்களே உள்ளே அழைத்துச் சென்ருள். ஸ்ரஸ்; வதியைத் தனியாகப் பார்த்து. 'ஏண்டி அம்மா! நான் என்ன செய்வேன்? இந்த மாதிரி திடும் என்று வீட்டுச் சமாசாரங்களைத் துப்புத்துலக்க வந்துவிட்டாளே?' என்று கவலையுடன்: கேட்டாள்.

'எல்லாம் தெரிந்துகொண்டுதான்் வந்திருக்கிருள் அத்தை. அந்தப் பெண் யாரென்பது உனக்குத் தெரியுமா? பரம சாதுவாக: இருக்கும்போல் இருக்கிறதே!' என்று விசாரித்தாள் ஸ்ரஸ்வதி. 'யரோ என்னவோ? அலமுவுக்கு உறவினர் ஆயிரம் பேர்கள் இருப்பார்கள்! எல்லோரையும் உறவு கொண்டாடுவது அவள் வழக்கம். இன்றைக்கு ஒருத்தர் நல்லவராக இருப் பார்கள். நாளைக்கே அவர்களைக் கண்டால் அலமுவுக்குப் பிடிக் காது. அது ஒருமாதிரி சுபாவம்' என்ருள் ஸ்வர்ணம். - இதற்குள் ஊரிலிருந்து வந்தவர்கள் சாப்பாட்டை முடித்து விட்டு வெளியே வந்தார்கள். சாயம்போன. பழைய சீட்டிப் புடைவையையும். பல இடங்களில் தைக்கப்பட்ட ரவிக்கையையும். அங்கம் உடுத்துயிருந்தாலும், பருவத்துக்கு ஏற்ற பூரிப்பு அவள் உடம்பில் பளிச்சிட்டது. பல வாசனைத் தைலங்களாலும்,