பக்கம்:இருளும் ஒளியும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 இருளும் ஒளியும்

'மனம் போனபடி பாடுபவர்களுக்குத்தான்் தைரியம் உண்டு. விழா மண்டபத்தைக் கிராமத்தின் மாட்டுத்தொழுவமாக நினைத்துக்கொண்டுவிட்டால் ஆயிற்று. எல்லாவற்றிற்கும் மனம் தான்ே காரணம், தங்கம்? அரண்மனையையும், குடிசையையும் சமமாகப் பாவிக்கும் மகான்கள் பிறந்த தசத்தில் கொஞ்ச மாவது நாம் சமதிருஷ்டியோடு இருக்கவேண்டாமா? ஏதோ ஒரு பாட்டுப் பாடு பார்க்கலாம். பிறகு சொல்கிறேன். உனக்குப் பாட வருமா, வராதா என்று?' என்ருன் ரகுபதி. சிறிது பொழுது தங்கம் தரையைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். பிறகு மெதுவான குரலில், 'நந்தகோபாலைேடு நான் ஆடுவேன்' என்கிற பாட்டை பல பிழைகளுடன் பாட ஆரம்பித்தாள். பிழைகள் மலிந்திருந்தபோதிலும், அவள் பாட்டில் உருக்கம் இருந்தது. அவள் மனத்தில் கண்ணனின் உருவம் நிறைந்திருப் பதும் அவள் அதை அநுபவித்துப் பாடுகிருள் என்பதும் புரிந்தது. அவளுடைய அகன்ற விழிகளிலிருந்து தாரை தாரை யாகக் கண்ணிர் பெருகியது. உடனே உதடுகள் படபடவென்று துடித்தன. மெல்ல மெல்ல பாட்டின் ஒலி அடங்கிவிட்டது. விம்மலின் ஒலிதான்் அதிகமாயிற்று. தங்கம் இரண்டு கை களாலும் கண்களைப் பொத்திக்கொண்டு தேம்பினுள்.

ரகுபதி திடுக்கிட்டான். சற்றுமுன் சிரிப்பும், கேலியுமாகப் பேசிக்கொண்டிருந்தவளுக்குத் திடீரென்று என்ன வந்துவிட்டது என்று நினைத்து வாஞ்சையுடன் அவள் தலையை வருடி, 'தங்கம்! இதென்ன அம்மா! ஏன் அழுகிருய்? உன்னை யாராவது ஏதாவது சொன்னர்களா?' என்று கேட்டான்.

தங்கம் மெதுவாக 'இல்லை என்று தலையசைத்தாள். பிறகு அழுகையின் நடுவில் சிரித்துக்கொண்டே, நான் டாடியது நன்ருக இருக்கிறதா அத்தான்்? என் குரல் நன்ருக இருக் கிறதா?' என்று கேட்டாள். அழுகையின் நடுவில் பளிச்சென்று தன் முத்துப்போன்ற பற்கள் தெரிய நகைக்கும் அந்தப் பெண்ணின் முகவிலாசத்தை உற்றுக் கவனித்தான்் ரகுபதி. வாணவெளியில் சஞ்சரிக்கும் கார்மேகத்தைக் கிழித்துக்கொண்டு புறப்படும் சூரியனின் காந்தியைப்போல் அவள் முகத்திலும் களே சுடர் விட்டது.

'நீ நன்ருகப் பாடுகிருய். உன் குரலும் இனிமையாக இருக்கிறது. ஸரஸ்வதியிடம் கொஞ்சகாலம் சங்கீதம் பயின்றால்