90 - இருளும் ஒளியும்
உடைகள் உடுத்திக்கொண்டு உதட்டுக்குச் சாயம் பூசிக் கொள்ளத் தெரியாது' என்று அலமு ஆரம்பித்துவிட்டாள்.
'ஒஹோ!' என்ருன் ரகுபதி. உனக்கு நீந்தத் தெரியுமா? பலே! நான் கிராமத்துக்கு வந்தால் எனக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பாயா தங்கம்?' என்று கேட்டான் ரகுபதி.
'போங்கள் அத்தான்்! இந்தப் பெரியம்மாவுக்கு என்ன வேலை? எதையாவது சொல்லிக்கொண்டு இருப்பாள்!' என்று சிரித்துக்கொண்டே தங்கம் ஒடி மறைந்துவிட்டாள்.
ஸ்ரஸ்வதி ரகுபதியைப் பார்த்து, ' என்ன அத்தான்்! .கிராம யாத்திரை ஏதாவது போவதாக யோசனையோ?" என்று கேட்டாள்.
'வரட்டுமே! இங்கே உட்கார்ந்துகொண்டு orsārar செய்கிருளும்? பெண்டாட்டிதான்் கோபித்துக்கொண்டு ஊரிலே போய் உட்கார்ந்திருக்கிருள். இவன் போய் அவளை வேண்டி அழைத்துவர வேண்டுமாக்கும்! நன்ருக இருக்கிறது ஸ்திரி சுதந் தரம்?' என்று அலமு சற்று இரைந்து கோபத்துடன் கூறினுள்.
'அப்பொழுது தங்கத்தையும் உங்களோடு அழைத்துட் போய் விடுவீர்களா என்ன?’ என்று கேட்டாள் ஸரஸ்வதி.
"ஆமாம். . அவள் இங்கே எதற்காக இருக்க வேண்டும்? உன்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அழைத்து வந்தேன்' என்ருள் அலமு.
சாவித்திரி புக்ககத்துக்கு வந்தாள். வந்து இரண்டு மூன்று மாதங்களுக்குள் ஊருக்குப் போய்விட்டாள். տուաւգամ ஸ்ரஸ்வதியின் வாழ்க்கை தனியாகவே கழிந்தது. திடீரென்று தங்கம் வந்தாள், பெயரைப்போல் ஒளியை வீசிக்கொண்டு! சாவித்திரியைப்போல் இல்லாமல் கபடமற்றுப் பழகினள். ஸரஸ் வதியுடன் பாடினள். 'ஸரஸ் அக்கா!' என்று சகோதர் பாவம் கொண்டாடி அருமையாக அழைத்தாள்! ஸரஸ்வதியின் மனத்தில் இடமும் பிடித்துக்கொண்டாள். பத்தரைமாற்றும் பசும் பொன்னை உருக்கி வளைப்பதுபோல் தங்கத்தைப் பலவிதங் களிலும் சீர்திருத்தி சமூகத்தில் உயர்ந்தவளாகச் செய்ய முடியும் என்று ஸரஸ்வதி கருதினள். அவளிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்குக் கொண்டுவரமுடியும் என்று நினைத்தாள்: ஆனல் தங்கம் ஊருக்குப் போகப்போகிருள். கிராமத்தில்ே இருண்ட ஒட்டுவீட்டின் மூலையில் மினுக் மினுக் கென்று எரியும் அகல் விளக்கைப்போல் அவளும் கிராமத்திலே இருண்ட வீட்டில்