உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தை பிறக்கால் வழி பிறக்காகா: ' 91

மங்கிய வெளிச்சத்தைப் பரப்பிக்கொண்டு இருப்பாள். இந்தப் பெண்-சமூகத்தில் எல்லா நலங்களையும் பெற்று வாழ வேண்டிய தங்கம்-யாராவது ஒரு வயோதிகனுக்கோ, வியாதிக் காரனுக்கோ, தன் கழுத்தை நீட்டி விவாகம் என்கிற பந்தத் தைப் பிணைத்துக் கொள்ளாமல் இருக்கவேண்டுமே! அரும்பு வெடித்து மலர்வதற்கு முன்பே கசக்கி எறியப்படாமல் இருக்க வேண்டுமே! அப்படி அவளைக் காப்பாற்ற யார் வரப் போகிரு.ர்கள்?

ஸரஸ்வதியின் மென்மையான மனம் புண்ணுக வலித்தது. 'இன்று அவள் அந்த வீட்டுக் கூடத்தில் கண்ட தங்கத்தைப் போல் தமிழ் நாட்டில் ஆயிரம் ஆயிரம் தங்கங்கள்' அவதிப்படு கிரு.ர்கள். ஏழைப் பெண்கள் என்கிற காரணத்தினல் நசுக்கப் படுகிருர்கள்' என்பதை நினைத்தபோது, ஏனே அவள் மனத்தை ஆயிரம் ஊசிகளால் குத்தும் வேதனையை அடைந்தாள். மனத்தில் குமுறும் வேதனையுடன் ஸரஸ்வதி அங்கிருந்து சென்று தங்கம் உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு வந்தாள். அவள் கரங்களைப் பற்றிச் சேர்த்துத் தன் கைகளில் பிணைத்துக்கொண்டு, 'தங்கம்! நீ ஊருக்குப் போகிருயாமே தங்கம்? ஏன், உனக்கு இந்த ஊர் பிடிக்கவில்லையா என்ன?' என்று கேட்டாள்.

தங்கத்தின் கண்களிலும் கண்ணிர் தளும்பி நின்றது. பிடிக்காமல் என்ன அக்கா? இருந்தாலும், எத்தனை நாளேக்கு நான் இங்கே இருக்க முடியும்? தை பிறந்தால் எனக்கும் ஒரு வழி பிறக்காதா என்று ஏங்கிக் காத்திருக்க வேண்டாமா நான்? அத்துடன், என் ஊரில் எனக்கு ஏற்படும் இன்பம் மற்ற இடங்களில் ஏற்படுவதில்லை அக்கா. 'தங்கம்மா' என்று கபடமில்லாமல் அழைக்கும் அந்தக் கிராமவாசிகளின் அன்பை எனக்கு இங்கே காணமுடியவில்லை. இங்கேயும் உன் னைத் தேடி அநேகம் பெண்கள் வருகிருர்கள். உன்னுடைய அருமைத் தோழிகள் என்று சொல்லிக்கொள்கிருய். ஆனல், அவர்கள் பகட்டாகப் பேசுகிரு.ர்கள். மனம் விட்டு நீங்கள் எதுவும் பேசுவதில்லை. அன்று ஒரு பெண்ணைப் பார்த்து நீ கேட்டாயே, "உன் கணவரிடமிருந்து கடிதம் வந்திருக்கிறதா? செளக் யமாக இருக்கிருரா?' என்று. அதற்கு அவள் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டுத் தலையை மட்டும் ஆட்டிவிட்டாள். எங்கள் ஊரிலேயானல் கொள்ளை விஷயங்களைச் சொல்லி விடுவாளே அந்த மாதிரி ஒரு பெண் உள்ளத்து உணர்ச்சிகளை