பக்கம்:இரு விலங்கு.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


viii

சிறப்பு உண்டல்லவா? அதல்ை மேலும் மேலும் ஊக்கம் உண்டாகிறது. -

இந்தப் புத்தகம் கந்தர் அலங்கார வரிசையில் பதினே ழாவது நூலாக மலருகிறது. இதில் ஆறு பாடல்களுக்குரிய விளக்கங்கள் உள்ளன.

முதல் பாட்டில், முருகன் திருவருளைப் பெற்றவர் களுக்குப் பிற விப் பிணி இல்லையென்பதை அழகான முறையில் சொல்கிருர் அருணகிரியார் அடியாருக்குப் பிறவியைக் கொடுக்க எண்ணி அவர் பெயரைப் பிறப்போர் பட்டியலில் பிரமன் எழுதினல், அவனுக்கு முருகன் இரு விலங்கைப் போடுவான் என்று சமற்காரமாகச் சொல்கிருர், அந்தப் பாட்டின் விளக்கம், இரு விலங்கு என்ற தலைப்பில் இருக்கிறது. அதுவே நூலுக்குப் பெயராகவும் அமைகிறது. முருகன் பிரமனத் தளையிட்டுச் சிறையிட்டான் என்ற கந்த புராணக் கதை அவன் பிறவியைப் போக்கும் பெருமான் என்ற கருத்தையே விளக்குகிறது என்பதை இந்தப் பாட்டுக் குறிப்பாகப் புலப்படுத்துகிறது. - - - - -

அடுத்த பாடலிலும் நான்முகன் வருகிருன் ஆல்ை அதில் அவன் படைப்புத் தொழில் செய்பவன் என்ற வகையில் ஒரு குற்றச் சாட்டுக்கு ஆளாகிருன், செங் கோட்டு வேலவனத் தரிசித்து இன்புற நான்முகன் எனக்கு நாலாயிரம் க ண் க ளே ப் படைக்கவில்லையே! என்கிரும் அருணகிரிநாதர் முருகனுடைய பேரெழில் கண்ணிளுல் அளவிட்டு முடிப்பதற்கு உரியதன்று என்ற கருத்தையே அந்த முறையில் சொல்கிருர். இந்தப் பாட்டில் திருச்செங் கோட்டின் பெருமை வருகிறது. .

மூன்ருவது பாடலிலும் தொடர்ந்து திருச்செங் கோட்டில் எழுந்தருளியிருக்கும் வேலனே நினைக்கிருர் முன் பாட்டில் அவுனேத் தரிசித்ததல்ை உண்டான இன்ப உணர்வு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/10&oldid=539388" இருந்து மீள்விக்கப்பட்டது