பக்கம்:இரு விலங்கு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இரு விலங்கு


பொருட்படுத்தாமல் மல்போல நிமிர்ந்து நின்ருர்கள். அமராவதியையும், தேவலோகத்தையும் தமக்குரிய இட மாகப் பெற்று வாழ்ந்தார்கள். உலகத்தில் தம்மை வாழ்த்துகின்ற மக்களுக்கு நலம் செய்துகொண்டு எல் லோருக்கும் மேலானவர்களாகத் தங்களே எண்ணிக் கொண்டு வாழ்ந்தார்கள். அத்தகைய சமயத்தில் சூரன் தன்னுடைய கொடுமையைக் காட்டத் தொடங்கின்ை. பல படைகளை ஏவி அமரர்களுக்கு இடுக்கண் செய்தான். அசுரர் படைகள் தேவலோகத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு மண்டலம் இட்டன. அவை நெருங்கி வருவது தெரிந்து தேவர்கள் தப்பிப் பிழைப்பதற்கு எங்கே இடம் இருந்தாலும் அங்கே ஓடினர்கள். அவர்களுடைய உள்ளத்தில் அச்சம் மிகுந்தது. அதனுல் ஓட்டத்தில் வேகம் மிகுதியாயிற்று. தடுக்கி விழுந்தாலும் உருண்டு ஓடினர்கள். இப்படிச் சூரனுக்குப் பயந்து ஓடி உருண்டு துன்புற்ற தேவர்களுக்கு மீட்டும் அமைதியை உண்டாக்

கின்ை முருகன்.

முன்னலே இருந்த அமைதி அமைதியன்று. இறைவ லுக்கு அஞ்சாமல் இருந்ததால் சூரனுக்கு அஞ்சி ஓடிய நிலை உண்டாயிற்று. இப்போதோ இறைவன் திருவருளி ஞல் தமக்கு எமனுக வந்தவனே அழித்து நிலேயாக நிற்கும் நிக்ல வந்தது. இதற்கு முன்பு அவர்கள் தங்களுக்குத் தாங்களே அரசர்கள் என்று தான்தோன்றித் தம்பிரான் களாக வாழ்ந்தார்கள். இப்போதோ குரனே அழித்த வேலேயுடைய முருகப் பெருமானத் தங்களுடைய காவல கை வாழ்த்திக்கொண்டு வாழ்கிற நிலை பெற்ருர்கள். அமராவதியைக் காக்கும் தொழிலைப் பெயர் அளவுக்கு இந்திரன் கொண்டிருந்தாலும் சூரனுக்கு எதிரே நின்று தேவர்களைக் காக்க அவளுல் இயலவில்லே. அமரர்களையும். இந்திரனேயும் குரனுடைய அல்லல்களிலிருந்து காத் தவன் முருகப்பெருமான். வேலாயுகக் கடவுளாகிய அவனுடைய பாதுகாப்பில் இன்று தேவர்கள் யாவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/102&oldid=1283949" இலிருந்து மீள்விக்கப்பட்டது