பக்கம்:இரு விலங்கு.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வலம்புரியும் கிண்கிணியும்

அருணகிரி நாதர் முருகப்பெருமானுடைய திருக் கோலத்தைப் பலபடியாக நிக்னத்து நமக்கும் காட்டு கிருர். அந்தப் பெருமானுடைய திருமேனி உறுப்பு களின் நலன்களையும் பலவிடங்களில் சொல்லியிருக்கிருர், அவனுடைய வீரச் செயல்களையும், கருணேப் பெருக்க்ை யும் நினைப்பூட்டியிருக்கிரு.ர். சூரபன்மனேடு போர். செய்த கதை கந்தபுராணத்தில் வருகிறது. ஆனல் அருணகிரியார் அதனேப் பலபல வகையில் எடுத்துக் காட்டி முருகப்பெருமானுடைய வீரத்தை விரிவாக எடுத்துச் சொல்கிருர். வள்ளியம் பெருமாட்டியைத் திருமணம் செய்துகொண்ட அற்புதத் திருவிகளயாடல் அருணகிரியார் திருவாக்கில் வெவ்வேறு வகையில் சுவை யூட்டுகிறது. ..

இளமைத் திருவிளையாடல்கள்

நாம் இப்போது பார்த்து வரும் கந்தர் அலங்காரத் தில் முருகப்பெருமானுடைய இளமைப் பருவத் திருவிகள யாடல்கள் பலவற்றைப் பார்த்திருக்கிருேம், அருணகிரி யார் முருகனது இளமைத் திருமேனியையும், அவன் தன் காலில் அணிந்திருக்கும் தண்டை, வெண்டையம், சிலம்பு முதலியவற்றையும் வருணித்திருக்கிருர் முன் ஒரு முற்ை இளமுருகனுடைய இடையில் அணிந்த கிண்கிணி ஓசை பற்றிய பாட்டு ஒன்றைப் பார்த்தோம். - ஒருவரைப் பங்கில் உடையாள் குமாரன் உடைமணிசேர் திருவரைக் கிண்கிணி ஓசை படத்திடுக் கிட்டசுரர் -- வெருவரத் திக்குச் செவிடுபட் டெட்டுவெற் பும்கனகப் பருவரைக் குன்றும் அதிர்ந்தன தேவர் பயம்கெட்டதை