பக்கம்:இரு விலங்கு.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கலம்புரியும் கிண்கிணியும் 87

ஊடலும் கூடலும்

ஒருநாள் கண்ணபிரான் ருக்மிணியுடன் அமர்ந் திருந்தான். அப்போது அவன் ருக்மிணிப் பிராட்டியைப் பார்த்துப் புன்னகை பூத்தான். 'ஏன் நகைக்கிறீர்கள்?" என்று பிராட்டி கேட்க, கண்ணன், 'உலகத்தில் அரசர் திலகமும் உயர்ந்த பெருமையோடு கூடியவனுமாகிய விதர்ப்ப மன்னனுடைய புதல்வி நீ. நானே எனக்கென்று ஒர் அரசு இல்லாதவன். அதுவன்றி ஆயர் மத்தியில் வளர்ந்தவன். ஆயர்பாடியில் வெண்ணெய் முதலிய வற்றைத் தி ரு டி ன வ ன் சராசந்தனுக்கு அஞ்சி மதுரையை இழந்து துவாரகைக்கு வந்தவன். இப்படிப் பல வகையில் இழிவு பெற்ற என்னே நீ கணவகைத் தேர்ந்தெடுத்தாயே! இது உன்னுடைய அறியாமையைக் காட்டவில்லையா?' என்று கேட்டான். மேலும் பல வகையில் தன்னே இழிவாகக் கூறிக்கொண்டான்.

இது கேட்ட ருக்மிணிப்பிராட்டிக்கு மிக்க வருத்தம் உண்டாயிற்று. அதனால் மயங்கி வீழ்ந்தாள். அதைக் கண்ட கண்ணன் அப்பிராட்டியை எடுத்து அணேத்துப் பன்னிர் தெளித்து உபசாரம் செய்தான். விழித்து எழுந்த ருக்மிணியைப் பார்த்து. 'உன் இயல்பைத் ெத ரி ந் து கொள்வதற்காக நான் இப்படிப் பேசினேன்' என்று சொல்லிச் சமாதானப்படுத்தினன். 'என் உயிர்த் துணை யாகிய உன்னே நான் கனவிலும் மறக்க மாட்டேன்' என்று கண்ணன் சொல்ல. 'எம்பெருமாளுகிய தங்களு டைய திருத்தாளேயன்றி வேறு எதையும் அறியாத ஏழையாகிய என் உயிர் போகும் அளவுக்குத் துன்பத் தைத் தருகிற வார்த்தையை நீங்கள் சொன் னிர்களே!' என்று கூறிப் பின்னும் சொல்ல ஆரம்பித்தாள்,

தாங்கள் நல்ல உருவம் இல்லாதவர்கள் என்று சொன்னீர்கள். அப்படிச் சொன்னது உண்மை தாங்கள்