பக்கம்:இரு விலங்கு.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
88
இரு விலங்கு


உருவம் கடந்த பெருமான். வேத நெறியைத் தப்பி ஒழுகியதாகக் கூறினர்கள். தாங்கள் வேதத்திற்கு எட் டாத பரம்பொருள் என்பதை நான் உணர்வேன்; வருணத்தில் தாழ்ந்த குலத்தினரோடு பயின்றேன் என்று சொன்னீர்கள். தாங்கள் அனந்தளுகையால் எல்லாக் குலத்திலும், எல்லாரிடமும் இருக்கிறீர்கள். என்னே யார் அறிவார்கள் என்று சொன்னிர்கள். தங்களே உணர்வதற் குரிய ஆற்றல் உள்ளவர்கள் யாரும் இல்லே. ஆகையால் தாங்கள் சொன்னவை எல்லாம் ஒரு வகையில் மெய்யே' என்று புள்னகை பூத்தாள் பின்பு இருவரும் மகிழ்ந் திருந்தார்கள்.

நாரதர் செய்த கலகம்

விடிந்தது. அப்போது நாரத முனிவர் வீணேயை இசைத்துக்கொண்டு அங்கே வந்து சேர்ந்தார். கண்ண பிரானும், ருக்மிணிப் பிராட்டியும் அவரை வணங்கி, அர்க்கிய பாத்திய ஆசம ணியம் அளித்து உபசாரம் செய் தார்கள். அப்போது அம்முனிவர் கண்ணபிரானுடைய கையில் பாரிசாத மலர் ஒன்றை அளித்தார். அதனைக் கண்ணபிரான் ருக்மிணியின் திருக்கரத்தில் ஈந்தான். ருக்மிணி அதனத்தன்னுடைய குழலில் குட்டிக்கொள்ள, அது கண்டு நாரத முனிவர், "இந்தப் பாரிசாத மலர் இப் பெருமாட்டியின் கூந்தலில் சேர என்ன தவம் பண் னியதோ?’ என்று பாராட்டினர். பின்பு கண்ணபிர்ா னிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார்.

நாரதர் எப்போதும் கலகம் செய்கிறவர் என்பது புராணங்களே உணர்ந்தவர்களுக்குத் தெரியும். இப்போ தும்.ஒருகலகத்தை உண்டாக்க அவர் புறப்பட்டார். நேரே சத்தியபாமையின் அந்தப்புரத்துக்குப் போய்ச் சேர்ந் தார். சத்தியபாமை முனிவரைக்கண்டு உபசாரம்செய்து, "இங்கே எழுந்தருளியது என்ன காரணம்?' என்று கேட்டாள். நாரதர், கண்ணபிரானுடைய தேவியர்