பக்கம்:இரு விலங்கு.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
90
இரு விலங்கு


பாரிசாதப் போர்

மறுநாள் காலே, கண்ணபிரான் எழுந்து நீராடி ஆடை அணிகள் அணிந்துகொண்டு பாரிசாதத் தருவைக் கொண்டு வரப் புறப்பட்டான். கருடனே நினேந்தவுடன் அவன் வர, அந்த வாகனத்தின்மேல் ஏறிக்கொண்டு தன் அ ரு கி ல் சத்தியபாமையை வைத்துக்கொண்டு புறப் பட்டான் பாரிசாத மரம் தேவலோகத்தில் அமராவதி யில் இருக்கிறது. கருட வாகனத்தின்மேல் சத்தியபாம்ை யுடன் கண்ணபிரான் தேவலோகத்தை அடைந்தான். அவன் வருவதை அறிந்து இந்திரன் பல வகையான விருதுகளுடன் சென்று வரவேற்று உபசரித்தான். கந்தருவர், கின்னரர், இயக்கர், கிம்புருடர், வித்தியாதரர் முதலிய பலரும் வந்து வரவேற்ருர்கள். நாரதர் முதலிய வர்கள் வீணை வாசித்தனர். யாவரும் புகழ் சொல்லி ஏத்தினர் கண்ணபிரான வரவேற்று அவனே வீதி வழியே வலமாக அழைத்துச் சென்று தன் அரண்மனை யைச் சேர்ந்தான் இந்திரன். சத்தியபாமையை இந் திராணி தன் அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்று நல்ல ஆதனத்தில் இருத்தி உபசாரம் செய்தாள்,

பின்னர் அவர்கள் இரண்டு பேரும் சொக்கட்டான் விளேயாடினர்கள். அந்த விளேயாட்டில் வெல்பவர்களுக் குத் தோற்பவர்கள் இன்னது கொடுக்க வேண்டுமென்று பணயம் வைத்தார்கள். நான் தோற்ருல் பாரிசாத மலரைத் தருவேன்' என்ருள் இந்திராணி, "நான் தோற்ருல் கண்ண பிரான் தந்த சமந்தக மணிய்ை உனக்குத் தருவேன்' என்று சத்தியபாமை சொன்னுள். இருவரும் உட்கார்ந்து சொக்கட்டான் பலகையை வைத்துக் காய்களே எறிந்து ஆடத் தொடங்கினர்கள் அந்த ஆட்டத்தில் இந்திராணி தோல்வி அடைந்தாள். சத்தியபாமை வெற்றிபெற்ருள். முன்னலே பந்தயம் புேசிக்கொண்டபடி சத்தியபாமை தன்னச் சார்ந்த