பக்கம்:இரு விலங்கு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலம்புரியும் கிண்கிணியும்

97

வலம்புரியும் கிண்கிணியும் 9?

செய்வனவற்றைத் திருவிளையாடல் என்றே சொல்வார் கள். வீளையாட்டுக்கும் வினைக்கும் வேறுபாடு உண்டு) உலகத்தில் விளையாட்டுக்கும் இரண்டு கட்சி உண்டு. வினேக்கும் இரண்டு கட்சி உண்டு, வினே முடிவில் தோல்வி யும் துன்பமும் உறுவர் ஒரு கட்சியினர். வெற்றியும் மகிழ்ச்சியும் பெறுவர் மற்ருெரு கட்சியினர். விளே யாடலிலோ ஒரு கட்சி வென்ருலும், ஒரு கட்சி தோற்ரு லும் முடிவில் இரண்டு கட்சியினருக்கும் இன்பம். இரண்டு பேர்களும் சேர்ந்து விருந்துண்பர். விளையாடலில் கட்சி அமைத்துக் கொண்டவர்கள் ஒருகால் வெற்றி தோல்வி என்று சொன்னலும் அதைப் பார்த்தவர்களுக்கு மகிழ்ச்சியே உண்டாகிறது.

ஆண்டவன் திண்கிரி சிந்த விளையாடினன். அந்த விளையாடலால் உலகத்திற்கு இன்பம் உண்டானதே யன்றித் துன்பம் உண்டாகவில்லை. அவன் தன்னுடைய அருளே எல்லோரும் பெறுவதற்காகப் பல விதமான விளையாடல்களேச் செய்கிருன். அவை வெவ்வேறு வகை யாகத் தோன்றிலுைம் முடிவில் இன்பத்தைத் தரு. வனவே. அவன் சூரபன்மனே எதிர்த்துப் போராடிய தாகக் கந்தபுராணம் சொல்கிறது. அவ்வாறு செய்த போர் கூட அவனுடைய திருவிளேயாடலில் ஒன்றுதான் குரபன்மனே அழிக்க வேண்டுமென்பது அவன் நோக்கம். அன்று. முருகனேப் பகைவன் என்று அந்த அசுரன் எண்ணிஞனேயொழிய, முருகன் குரபன்மனே அவ்வாறு எண்ணவில்லே. பொல்லாத குழந்தையைத் தந்தை தண்டிப்பது போல, முருகன் அவனுடைய பொல்லாத் தனத்தைப் போக்குவதற்காகப் பலகாலம் போர் செய் தான். என்றைக்காவது அவன் அறிவு பெற்றுத் தன் வலியின்மையைத் தெரிந்துகொண்டு காலில் வந்து விழு வான் என்று எதிர்பார்த்தான், அவ்வாறு சூரன் செய் யாமையில்ை கடைசியில் தன் திருவுருவத்தைக் காட் டினன். அந்தக் கோலத்தின் பேரெழிலில் மயங்கியு இரு-7 . . - , -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/119&oldid=1402673" இலிருந்து மீள்விக்கப்பட்டது