பக்கம்:இரு விலங்கு.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


98 இரு விலங்கு

குரன் உள்ளம் குழைந்து அடியாருடைய இயல்பைப் பெற்ருன். அப்போது முருகப்பெருமான், இவன் உள்ளம் தையும் பண்பினகை இருக்கிருன்; இவனே ஆட் கொள்ளலாம் என்று கருதி அவன்மேல் வேலேவிட்டான். மாமரமாக நின்ற உருவம் பிளந்து இரண்டு பகுதிகளாக நிற்க, ஒரு பகுதி ஆண்டவன் வாகனமாகவும், மற்ருெரு பகுதி சேவல் கொடியாகவும் ஆயின. சூரன் பெற்றது ஆண்டவனது வாகனமாகவும். கொடியாகவும் நிற்கும் பேறு. இது சங்காரம் ஆகுமா? இது ஒரு வகையான அருள். . . . . முருகப்பெருமான் குரனுக்கு முன்னுல் நின்று போர் செய்தது ஒருவகையான அருள்தான் என்று சூரபன்மனே சொல்வதாகக் கந்தபுராணம் தெரிவிக்கிறது.

அண்ணலார் குமரன் மேனி அடிமுதல் முடியின் காறும் எண்ணிலா ஊழி காலம் எத்திறம் நோக்கி லுைம் கண்ணினால் அடங்கா துன்னிற் கருத்தினல் அடங்க

தென்பால் .. நண்ணிஞன் அமருக் கென்கை அருளென நாட்டலாமே என்று சொல்கிருர் கச்சியப்பர். சிறிதும் ஐயம் இல்லா மல் துணிவாகச் சொல்கிருன் என்பதைப் புலப்படுத்த,

"நாட்ட லாமே என்ற சொல்லே இங்கே அமைக்கிருர்,

அறுமுகன் ஆடல் முருகப்பெருமான் வள்ளி,நாயகியிடம் காதல் கொண் டான். அதுவும் ஒரு வகையான திருவிளையாடல்தான். உலகில் மக்கள் காமத்தில்ை துன்புறுகின்ற நிலை அன்று அது. ஆண் பெண் உறவுக்கு முன்னலே காதல் வயப் பட்டுத் துன்புறுகிற நிலைக்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. முருகப்பெருமான் வள்ளியம் பெருமாட்டியை. ஆட்கொள்வதற்காகவேண்டி விளையாடினன். அதனைக் கச்சியப்ப சிவாசாரியார் 'அறுமுகன் ஆடல்' என்று சொல்வார். . . . . .