பக்கம்:இரு விலங்கு.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


..100 இரு விலங்கு

விளையாட்டின் பயன்

முருகப்பெருமான் செய்த திருவிளையாடலின் பயன் ஒர் இடத்திற்கு மாத்திரம் அமைவது அன்று. எல்லா உலகங்களிலும் உள்ள உயிர்கள் அவன் செய்கிற திருவிளையாடல்களில்ை இன்பம் பெ று வார் க ள்; இதனேயே அழகாக, அவன் கிண்கிணி ஓசை பதினன்கு உலகமும் கேட்டது என்பதல்ை பெற வைக்கிரு.ர்.

கண்ணபிரான் தன்னுடைய மனே யாட்டியின் நலம் கருதிப் பாரிசாத மரத்தைக் கொண்டு வர முயன்ருன்; அதற்காகத் தான் இருக்கும் இடத்திலிருந்து தேவ லோகம் சென்று தேவர்களோடு போரிட்டான். முயன்று மூச்சைப் பிடித்து வலம்புரி ஒசையை முழக்கினன். அந்த ஒசை பாரிசாத மரம் வளர்ந்திருந்த சோலேயிலும், அதன் அருகில் இருந்த வாவியிலும் மட்டும் கேட்டது. அதற்கு மேல் அந்த முழக்கம் கேட்கவில்லே முருகப்பெருமானே சரவணப் பூம்பொய்கையில் திரு அவதாரம் செய்து கந்த கிரியைச் சுற்றி விளையாடினன். அவன் விளையாடலால் மலேகள் எல்லாம் அதிர்ந்தன. அவனுடைய அழகிய இடையில் அணிந்திருந்த கிண்கிணிகள் அசைந்தன; அந்த அசைவிலே உண்டான ஓசை பதின்ைகு உலகமும் கேட்டு இன்பத்தைச் செய்தது. "கேட்டதுவே என்று மட்டும் இந்தப் பாடலில் அருணகிரியார் சொல்கிருர், ஆயினும் இந்தக் கிண்கிணி ஓசையைக் கேட்ட உயிர்கள் எல்லாம் நம்மைப் பாதுகாக்கும் நாயகன் வந்துவிட் டான் என்று எண்ணி உள்ளம் தளிர்த்தன என்பதை இகளுல் பெறும் குறிப்பாகக் கொள்ளவேண்டும். "

முருகப்பெருமான் திரு அவதாரம் செய்தவுடனே தன்னுடைய வீரத்தையும் அருட் பெருக்கையும் காட்டிக் கொண்டான் என்பது இதன் கருத்து, -