பக்கம்:இரு விலங்கு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல வேட்கை

103


மதம், மாச்சரியம் என்று சொல்லும் ஆறு பகைவர்களும் மக்களுடைய உள்ளத்தில் இருந்து மன அமைதி இல்லா மல் செய்கிரு.ர்கள். இந்த ஆறிலும் காமமாகிய ஆசை

எல்லாவற்றிலும் மீதுார்ந்து நிற்கிறது. அந்த ஆசையும்

மண், பெண், பொன் என்று மூன்று வகைப்படும். இந்த

மூன்று ஆசைகளிலும் மிக விரிவாக, ஆழப் படர்ந்து

நிற்கும் ஆசை பெண்ணுசை. பெண்ணுசையில்ை துன்

புறுகிறவர்கள் எல்லாக் காலத்தும் இருக்கிரு.ர்கள். எப்

போதெல்லாம் தவம் குறைகிறதோ, மக்களுக்கு மன

வலிமை குறைகிறதோ, அப்போதெல்லாம் அந்த ஆசை

மீதுார்ந்து நிற்கும். பெரிய இதிகாசங்களில் வருகிற

கேடுகளுக்கு மூல காரணம் காமமாக இருப்பதை நாம் பார்க்கிருேம்; மனிதனேப் பீடிக்கும் அக நோய்களுக்குள்

காமம் மிகமிக வலிமையானது; பெரும்பாலானவர்களைப்

பீடிக்கும் வியாதி அது.

அருணகிரியார் மக்களிடம் உள்ள தீய குணங்களே மாற்றுவதற்குரிய பரிகாரங்களை அங்கங்கே சொல்கிருர், ஒவ்வொன்றையும் பற்றித் தனித்தனியே சொன்னலும் பெரிய நோயாகிய காமத்தைப் பற்றி அடிக்கடி சொல் திருர் மிகுதியாகச் சொல்கிருர், அப்படி மிகுதியாகச் சொல்வதற்குக் காரணம் அந்தத் தீய குணமே பெரும் பாலோரிடம் ஆழமாகப் பதிந்து இருப்பதுதான். அவர் பாடிய திருப்புகழ் முதலிய நூல்களிலுள்ள பாடல்களைக் கணக்கு எடுத்துப் பார்த்தால் காம நோய் பற்றியனவே மிகுதியாக இருப்பதைக் காணலாம். மக்களிடத்தில் கருணை கொண்ட மனத்தவர் ஆகையால், எந்த நோய் மிகுதியாக இருக்கிறதோ அதைப்பற்றி மிகுதியாகக் கண்டிக்கும் இயல்பு அவரிடம் இருந்தது.

கால நிலை

அருணகிரிநாதர் வாழ்ந்த காலத்தில் பெரிய மன்னர் யாரும் இல்லை. அங்கங்கே குறுநில மன்னர்கள் இருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/125&oldid=1402676" இலிருந்து மீள்விக்கப்பட்டது