பக்கம்:இரு விலங்கு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

இரு விலங்கு


கணவன் மனைவி என்ற உறவு மிகவும் தூயது என்பதை இந்த நாட்டில் பலகாலமாக வற்புறுத்தி வந்த தைப்போல வேறு எந்த நாட்டிலும் வற்புறுத்தவில்லே. அந்த உறவைக் கணவன் மனேவியாகிய இருவரும் பாது காத்ததோடன்றி உறவினரும் நாட்டினரும் பலவகையில் மதிப்புக் கொடுத்துப் பாதுகாத்தார்கள். 'கல்லாலுைம் கணவன்: புல்லானலும் புருஷன் என்று சொல்லிக் கற்புணர்ச்சியை ஊட்டிவந்தார்கள் இந்த நிலை மாறுவ தற்கு முக்கிய காரணம் பருவத்தினல் புறக்கண்ணுக்குத் தோற்றுகிற தோற்றத்தில் மனத்தை இழந்து நிற்பது தான், எந்தப் பொருளேயும், புறத்தோடு அகத்தையும் பார்த்து எடை போடுபவர்கள் அறிவு உடையவர்கள்) அழகு என்று புறத்தை மாத்திரம் பார்த்தால் ஏமாந்து போகவேண்டியதுதான்.

புறமும் அகமும்

ஒரு குழந்தை கூடத்தில் விளையாடிக் கொண்டிருக் கிறது. அப்போது அங்கே ஒரு பாம்பு படம் எடுத்து ஆடுகிறது. பளபளவென்ற படத்தைக் கண்ட குழந்தை அதன் அருகில் சென்று பிடிக்க முயல்கிறது. அப்போது திடீரென்று அந்தக் குழந்தையின் தாய் அங்கே வரு கிருள்: பாம்பையும், குழந்தையையும் பார்த்தவுடன் ஐயோ என்று அலறிக்கொண்டு குழந்தையை அப்பால் எடுத்தோடுகிருள். அவளும் அந்தப் பாம்பைப் பார்த் தாள். பாம்பின் படம் பளபளவென் றிருப்பதையும் பார்த்தாள். ஆனல் அதோடு அவள் நிற்கவில்லை. புறத் தில் தோன்றிய படத்தின் பளபளப்போடு அதன் அகத் திலுள்ள நஞ்சையும் அவள் நோக்கினுள். அவள் புறக் கண் அதைச் சொல்லாவிட்டாலும் அவள் நெஞ்சம் அதைச் சொல்லியது; அவளுடைய அறிவு சொல்லியது. புறக் கண்ணேயும், அகக் கண்ணேயும் கன்முக இணைத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/132&oldid=1283962" இலிருந்து மீள்விக்கப்பட்டது