பக்கம்:இரு விலங்கு.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நல்ல. வேட்கை 111

பார்க்கும்போது பரம்பினுடைய ப ள் ப ள ப் பும், அதனூடே கரந்து நிற்கும் நஞ்சும் அவளுக்குத் தெரிந்தன. நஞ்சினல் தன் குழந்தை இறந்துபடும் எனற நினேவு வரவே, அதிலிருந்து பாதுகாப்பதற்காக அவள் தன் குழந்தையை எடுக்க ஓடினுள். அவள் கண்ட காட்சிதான் உண்மையான காட்சி. குழந்தை கண்ட காட்சியின் போக்கிலே விட்டிருக்தால் அந்தத் குழந்தை பாம்புக்குப் பலியாகியிருக்கும். புறமும் அகமும் ஒத்துப் பார்க்கின்ற பார்வையில்ை உண்மையான பயன் உண்டா கிறது.

புறங்காணுதலும் அகங்காணுதலும்

- இராமாயணத்தில் இராமனுடைய அருள் பெற்ற விராதன் அப்பெருமானுடைய பேருருவத்தைத் தரிசனம் செய்கிருன். இராமபிரான் அவனுக்குத் தன் விசுவ ரூபத்தைக் காட்டுகிருன். அந்தப் பெருமானுடைய் திரு வுருவத்தில் ஈடுபட்ட விராதன் அவனுடைய திருவடி முதல் திருமுடி வரைக்கும் பார்க்கிருன். ஆராத பெருங் காதல் மீதுர அந்த அழகில் சொக்கிப் போகிருன். உணர்ச்சி விஞ்ச இராமபிரானுடைய திருக்கோலத்தை எண்ணிப் பாராட்டித் துதி செய்கிருன். ஒரு பாட்டில் இராமபிரானின் திருக்கண்களைப் பற்றிப் பேசுகின்ருன்.

புறக்கண்கொண்டு புறத்தைப் பார்க்கிறவர்களுக்கும், அகக்கண் கொண்டு அகத்தைப் பார்க்கிறவர்களுக்கும் இன்பத்தைத் தருவன அக்கண்கள். புறத்தை மாத்திரம் பார்க்கிறவர்களுக்கு இராமபிரானுடைய திருவிழிகள் தாமரையைப் போலத் தோற்றுகின்றன. அதுவும் ஒர் அழகுதான். ஆணுல் அகக் கண் கொண்டு பார்க்கிறவர் களுக்கு அந்தப் புறக் கண்ணின் வழியாக இராமபிரா அடைய அகத்தையும் காணும் ஆற்றல் உண்டாகிறது. அவன் திருவிழிகளின் மூலமாக அவனுடைய அகத்தைக் காணும்போது அந்த ஆகம்.அருள் நிரம்பியதாக இருக்