பக்கம்:இரு விலங்கு.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


112 இருவிலங்கு

கிறது. உள்ளத்தில் நிரம்பியிருக்கிற கருணே வழிந்து அவனுடைய திருவிழியிலே பொங்குகிறது. அந்தக் கண் களே மேலெழுந்தபடி பார்க்கிறவர்களுக்கு அது தெரி யாது. ஊடுருவிப் பார்க்கிறவர்களுக்கு, அந்தக் கண் களின் வழியே அகத்தைப் பார்க்கிறவர்களுக்கு, இந்த உண்மை புலணுகும். இதை விராதன் சொல்கிருன்,

"புறங்காண அகங்காணப் பொதுமுகத்தின் அருளுேக்கம் இறங்காத தாமரைக்கண் எம்பெருமான் இயம்புதியால்' என்று அவன் துதிக்கிருன் புறக் கண்ணுக்கு இராமபிரா னுடைய கண் தாமரைக் கண்ணுக விளங்குகிறது. அகம் காணும்போதோ அந்தத் தாமரைக் கண் அருள் நோக்கம் சிறிதும் இறங்காத கண்ணுக இலங்குகிறது. புறம் காண்பாருக்கும் அகம் காண்பாருக்கும் பொதுவாக முகம் இருந்தாலும், அந்தக் கண்கள் புற அமுகில்ை தாமரை யாகவும், அக அழகில்ை அருள் நோக்கமுடையனவா கவும் தோற்றுகின்றன. இந்த இரண்டையும் யார் காண் இருர்களோ அவர்களே இராமன் கண்களே முழுமையாகக் கண்டவர்கள். புற நோக்கைக் கண்டமாத்திரத்தில் தாமரை என்று கண்டு இன்புறலாம்; ஆனால் அது பாதி யளவு கண்டது போன்றதுதான். எதைக் கண்டாலும் அதனிடையே உள்ள நுட்பத்தைக் காண்பது அறிவு. அதல்ை கிடைக்கிறது பேரின்பம். . . . . . .

ஒருவனுடைய முகம் அகத்தைக் காட்டும் கண்ணுடி போன்றது. அப்படியே அவனுடைய கண்ணும் கருத் தைக் காட்டுகின்ற வாயில். இந்த இரண்டையும் ஒருங்கே பார்க்கிறவன் பார்வைதான் மெய்ப்பார்வை. வி.ராதன் அப்படிப் பார்க்கிறவர்களுக்கு இராமனுடைய கண். தாமரையாகவும், அருள் நோக்கம் இறங்காத தாமரை யு.ாகவும் இருப்பதைத்தான் எடுத்துக் காட்டினன். "புறங்காண அகங்காணப் பொதுமுகத்தின் அருளுேக்கம்

இறங்காத தாமரைக்கண் எம்பெருமான்'