பக்கம்:இரு விலங்கு.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நல்ல GuLಣಹ 113

என்ருன் இப்படி அகமும் புறமும் ஊடுருவிப் பார்க் கின்ற மக்கள் உலகத்தில் மிகச் சிலர். -

'முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள் அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்' என்று திருமூலர் சொல்வர். .

தூய நோக்கும் மாய நோக்கும்

அருணகிரி நாத சுவாமிகள் புறக் கண்ணுல் புற அழகைப் பார்த்து மயங்குகின்ற நெஞ்சை நோக்கிச் சொல்கிரு.ர். ஒரு பெண்ணைக் காணும்போது இரண்டு வகையாகப் பார்க்கலாம்; அந்தப் பெண் எவ்வளவு அழகு உடையவளாக இருந்தாலும் அந்த அழிகை இறைவன் படைப்பாகக் கொண்டு அதனைப் படைத்த பெருமானேப் பாராட்டலாம். அதனை நாம் நுகரவேண்டு. மென்ற எண்ணத்தோடு நோக்குவது ஒரு வகை முந் தியது தூய நோக்கு. பிந்தியது மாய நோக்கு. அழகைக் கண்டவுடன் அறிவுள்ள மனிதனுக்கு ஆசை எழுவது இயல்பு என்று சொல்வது தவறு. தம்முடைய மகளே அழகியாகக் காணுகின்ற தந்தையர்கள் இருக்கிரு.ர்கள்: தம்முடைய சகோதரிகள் அழகியராக இருப்பதைக் கண்டு தூய நெஞ்சத்தில் மகிழ்ச்சி அடைகிறவர்களும் இருக்கிருர்கள். அங்கே அழகைக் கண்கள் பார்க்கத் தான் பார்க்கின்றன. ஆனால் அந்தப் பார்வையில் களங்கம் இருப்பதில்லை. அவ்வாறின்றிப் பலர் அழகைக் கண்டு அதைத் தம்முடைய காமப் பசிக்கு உணவாகக் கொள்ளவேண்டு மென்று எண்ணுகிருர்கள். இத்தகைய எண்ணம் படைத்த நெஞ்சை நோக்கிச் சொல்வது. போல அருணகிரியார் பாடுகிரு.ர். . . . .

ஒரு பொருளே முழுமையாகப் பார்த்து அதன் வழியே தொடர்புடைய மற்றப் பொருள்களை எண்ணி உண்மையை உணர்வது ஒருவகை. யானேயை முழுமை யாகப் பார்த்தவர்களுக்குத்தான் அதன் மேலேயுள்ள

৯৫-৪