பக்கம்:இரு விலங்கு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல வேட்கை

117


-கிக் கிடந்தாலும் விரிக்கும்போது பெரிதாக விரி வதுபோல அவள் முறுவல் இருக்கிறது. பலபல சொற்க ளால் பேசுபவற்றை எல்லாம் சிறிய புன்முறுவலால் அவள் சாதித்துக் கொண்டாள். தோதகச் சொல்லே விட அந்த வித்தார மூரல் அவனுக்கு நல்லது போலத் தோன்றுகிறது; அப்பால் அவளே மறக்க முடியுமா?

வள்ளேயைப் போன்ற காதுகளேயும், கெண்டையைப் போன்ற கண்களையும், கோவைப் பழம் போன்ற வாய் இதழ்களையும், உள்ளத்தை மயக்கும் சொற்களேயும், நித்தில வித்தாரப் புன்முறுவலேயும் எண்ணி எண்ணி ஏங்குகிருன். அவனுடைய நெஞ்சம் அல்கடல் பட்ட துரும்புபோலத் துள்ளி துள்ளி யாடுகிறது. கண்ணும் கருத்தும் மயலிலே உழன்று அமைதியை இழந்து வாழ்வை யெல்லாம் வீணுக்கிக்கொள்ளும் முயற்சியிலே தலப்படச் செய்கிறது. இதற்குத்தான அவன் கண்பெற் முன்? இதற்குத்தான அவன் கருத்துப் பெற்ருன்? அந்த நிலையில் இருக்கும் இளேஞன் தன் நெஞ்சைப் பார்த்துச்

சொல்வது போல அருணகிரியார் பாடுகிரு.ர்.

சிறு வண்த் தள்ளித் துள்ளிய கெண்டையைத் தொண்டையைத் தோதகச்

-- - சொல்லே நல்ல வெள்ளிய நித்தில வித்தார மூரலை வேட்ட நெஞ்சே!

நெஞ்சு கேட்கிறது: "கண்ணுலே கண்டு, காதாலே கேட்டவற்றை விரும்பாமல் வேறு என்ன செய்வது?" என்று கேட்கிறது.

விரும்புவதற்கு உரியது

“吊 விரும்புவதற்குரிய வேறு பொருள் ஒன்று உண்டு. முருகப்பெருமானுடைய திருவடி அல்லவா.உன் விருப்பத்திற்குரியது?" என்கிறர் அருணகிரியார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/139&oldid=1402684" இலிருந்து மீள்விக்கப்பட்டது