பக்கம்:இரு விலங்கு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



xii

வேண்டும் என்ற காதலை வளர்த்துக் கொண்டால் காமம் தோன்றாது. வள்ளிமணவாளனாக முருகனை வணங்குவதனால் வரும் பயன் இது. இது கருதியே, "தோதகச் சொல்லை நல்ல வெள்ளிய நித்தில வித்தார மூரலை வேட்ட நெஞ்சை"ப் பார்த்து இந்தப் பாட்டில், "தெள்ளிய ஏனவில் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும் வள்ளியை வேட்டவன் தாள் வேட்டிலை" என்று கூறுகிறார்.


ந்த ஆறு பாடல்களில் நான்கு பாடல்கள்(1, 2, 3, 5) முருகனைப் படர்க்கையில் வைத்துப் பரவியவை. ஒன்று (6) நெஞ்சை நோக்கிக் கூறியது. ஒன்று முருகனை முன்னிலையாக வைத்து விண்ணப்பித்துக் கொண்டது (4)

 முருகனுடைய திருவிளையாடல்கள் ப ல வ ற்  றை ச் சொல்லிப் பாராட்டுகிறார் அருணகிரிநாதர். முருகன் திருவவதாரம் செய்தவுடன் பலவகையான திருவிளையாடல் களைச் செய்தான்; திண்ணிய கிரிகள் சிந்தும்படி விளை யாடினான் (5); தன்னை மதியாது சென்ற பிரமனைக் காலில் தலையிட்டுச் சிறைப்படுத்தினான் (1); கிரெளஞ்ச மலையின் மேல் வேலைவிட்டுப் பொடியாக்கினான் (1);கடல்சுவற வேல் வாங்கினான் (1); சூரன் மாமரமாக நிற்க, அவன்மேல் வேல் எறிந்து கொன்றான்(3); படைத்தொகுதியுடன் வந்த சூரனை அழித்து அமரரைக் காப்பாற்றினான் (4); வள்ளிநாயகியை வேட்டுச் சென்று அவளைக் களவு கொண்டுவந்தான் (3); இந்த வரலாறுகளை இந்தப் பாடல்கள் நினைப்பூட்டு கின்றன. 
 அவனுடைய வேலை நான்கு பாடல்களில் (1, 3, 4, 5) எடுத்துச் சொல்கிறார். அது ஒப்பற்ற தனிவேல் (1); போர் வேல் (3). அவன் கொடியாக விள்ங்குகிறது சேவல் (3). அவனுடைய திருவடி தண்டையை அணிவது; தாமரை போல விளங்குவது; சுத்த ஞானமே வடிவானது (6). அவன் அழகிய திருவரையில் கிண்கிணியை அணிந்திருக்கிறான்; அது பதினாலுலகமும் கேட்கும்படி ஒலிக்கிறது (5.)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/14&oldid=1296590" இலிருந்து மீள்விக்கப்பட்டது