பக்கம்:இரு விலங்கு.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


118 இரு விலங்கு

'அவனே நான் பார்க்கவில்லையே; அந்தத் திருவடி எப்படி இருக்கிறதென்று கண்டால் அல்லவா அவன் பால் ஆசை உண்டாகும்?' என்று நெஞ்சு சொல்கிறது,

'காளுத பொருளிடத்திலும் ஆசை செலுத்தும் பண்பு உனக்கு உண்டே எத்தனையோ பொருள்களிடம் கேட்ட மாத்திரத்தில் நீ ஆசை கொள்கிருயே!” என்று அருணகிரியார் சொல்கிருர்,

மனம் கண்ட பொருளே மாத்திரம் எண்ணும் என்பது இல்லை. காதிேைல கேட்ட பொருளையும் எண்ணி ஆசைப் படுவது அதற்கு இயல்பு. இராவணன் முதலில் சீதை யைக் காணவில்லை. சூர்ப்பனகை சிதையினுடைய அழகைப் பலபடியாக அவனுக்கு வருணித்துச் சொன் ள்ை. அவள் வருணித்ததைக் கேட்டுச் சீதையிடத்தில் ஆசை கொண்டான் அவன். காதினலே கேட்ட பொரு ளின் மேல் ஆசை கொள்வதும் மனத்திற்கு இயல்புதான். அந்த வகையில் முருகப்பெருமானுடைய திருவடியைக் கண்ணலே காணுமல் இருந்தாலும், அது மிகச் சிறந்த நன்மையைத் தருவது. இன்பத்தை உண்டாக்குவது என்பதைப் பெரியார்கள் சொல்லியிருக்கிருர்கள். அவனு டைய பெருமையையும் பலவாருக நாம் கேட்டிருக் கிருேம். ஆகவே, 'காதினலே கேட்ட அந்தப் பொருளி டத்தில் வேட்கையை உண்டாக்கிக் கொள்' என்று அருணகிரியார் அந்தத் திருவடியை உடையவனேப் பற்றி விரிவாகச் சொல்லத் தொடங்கிளுர்,

தடுத்தாட் கொள்பவன்

முருகப்பெருமான் கருணையில் சிறந்தவன். அவன் பரம கருணுநிதி. அவனேச் சார்ந்து நலம் பெறுவதற்கு ஆன்மாக்கள் முயல்வது முறை. மிகுந்த பக்தியுள்ள ஆன்மாவைத் தான் சென்று பார்த்து கருணை செய்பவன் அவன்; அவர்களே அவனே வலியச் சென்று தடுத்தாட்