பக்கம்:இரு விலங்கு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இரு விலங்கு


ஆகையால் அந்தக் குலத்தை எண்ணிக் கள்ளச் சிறுமி என்று கூறினர் என்று சொல்லலாம். ஆனால் அதைவிடச் சிறந்த பொருள் ஒன்று உண்டு. மறைந்து நிற்பவர்களைக் கள்ளர் என்று சொல்வது ஒரு வழக்கம். திருமாலுக்குப் பெண்ணுகப் பிறந்தவள் வள்ளி. திருமால் முனிவராகவும் திருமகள் மாளுகவும் வர இரண்டு பேர்களுக்கும் பெண் கைப் பிறந்து வள்ளிக்கொடிக்குப் பக்கத்தில் கிடந்த போதுதான் நம்பிராஜன் அக்குமுந்தையை எடுத்துச் சென்ருன், அவள் இப்போது வேடர்களுக்கு இடையில் மறைவாக இருக்கிருள். வேடர் கூட்டத்தில் ஒருத்தியாகத் தன்னே எண்ணிக்கொண்டு வேட்டுவ மங்கை செய்யும் காரியங்களேச் செய்து கொண்டிருக்கிருள். முருகப் பெருமானிடத்தில் இயல்பாகவே குறக் குலத்தினருக்கு அன்பு உண்டு. அந்த வகையில் வள்ளியின் உள்ளத்தில் அன்பு இருந்தாலும், தனக்குள்ள உரிமையை எண்ணி அவனை அடையவேண்டு மென்ற முயற்சி யில்லாமல் இருக்கிருள். மறைவிலே வளர்ந்து வந்த வள்ளி எந்த இடத்தில் போய்ச் சேரவேண்டுமோ அந்த இடத்தில் சேராமல் தனித்து இருக்கிருள். ஆகையால் அவள் கள்ளத்தனமாக ஓர் இடத்தில் வைக்கப்பெற்ற பொருளேப் போல விளங்குகிருள்,

ஒரு பொருள் ஒருவனுக்குரியது. அது ஏதோ ஒரு காரணத்தில்ை ஒருவரும் அறியாமல் வேறு ஒரிடத்தில் இருப்பதாக வைத்துக் கொள்வோம் அங்கே அந்தப் பொருள் இருக்கிறதென்றுதெரிந்தபிறகு பொருளுக்குடை யவன் சும்மா இருப்பாளு? எப்படியாவது அதை போய்த் தன்னுடையதாக்கிக் கொள்ளவேண்டு மென்று முயல் வான். திருமாலினுடைய மகளாகிய வள்ளி நாயகி தன்னலே ஆட்கொள்வதற்குரியவள் என்று முருகன் அறிவான். அந்தப் பொருள் மறைவாக வள்ளி மலையில் இருக்கிற தென்பதை நாரத முனிவர் வந்த சொன்னர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/142&oldid=1283967" இலிருந்து மீள்விக்கப்பட்டது