பக்கம்:இரு விலங்கு.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


滋贺

முருகனுடைய தாள் வேட்டவருக்குக் கா ம த் த ல் துயரம் இல்லை; பிறவித்துன்பம் அறும்; என்றும் இன்பமய மான வீட்டுலக வாழ்வு கிடைக்கும் என்ற கருத்துக்களையும் இந்தப் பாடல்களில் காணலாம்,

தமிழ்ச் சொற்களோடு வடசொற்களேயும் விரவுவித்துப் பாடும் இயல்புடையவர் அருணகிரி நாதர். இப் புத்தகத் தில் வரும் பாடல்களில், அண்டம், ஆகுலம், உலகம், கிரி, சண்டம், சுத்தம், சூர், ஞானம், தண்டம், தரு, தெய்வம், தேவன், நித்திவம், பங்கேருகன், புண்டரிகம், பூகம், மண் டலம், முகன், மேதினி, வாவி, வித்தாரம் என்னும் வட சொற்கள் வந்தது காண்க.

பட்டோலையில் கணக்கு எழுதுதல் குற்றம் செய்தாரை விலங்குபூட்டித் தண்டித்தல், இரண்டு விலங்கு பூட்டுதல், காதல் மடந்தையைக் களவாக எடுத்து வருதல், கொடி யைக் கையிற் பிடித்தல், படைகளால் மண்டலமிட்டுச் சூழ் தல், அச்சத்தால் உருண்டு ஓடுதல், குழந்தையின் இடையில் கிண்கிணியைக் கட்டுதல், குறமகளிர் தினக்கொல்லையைக் காத்தல் ஆகிய வழக்கங்கள் பாட்டிலுள்ள செய்திகளால் தெரியவருகின்றன.

இந்தப் புத்தகத்தில் கந்தர் அலங்காரத்தில் வரும் 89.

ஆவது பாடல் முதல் 94ஆவது பாடல் முடிய ஆறு பாடல் களின் விளக்கத்தைக் காணலாம். இந்தச் சொற்பொழிவு களில் புராணக் கதைகளின் உள்ளுறையை அங்கங்கே விளக்

இயிருக்கிறேன். பழைய கதைகளேயும் புதிய கதைகளையும்

எடுத்துக் காட்டிக் கருத்தைத் தெளிவுபடுத்தியிருக்கிறேன்.

ஏற்ற உவமையால் பொருளைப் புலப்படுத்த முயன்றிருக் கிறேன். பாடல்க ளி ல் வரும் வரலாறுகளைச் சற்று விரி வாகக் சொல்வியுள்ளேன். கண்ணபிரான் வலம்புரியோசை செய்த வரலாற்றை ஐயங்கார் பாகவதத்தைக் கொண்டு விளக்கியிருக்கிறேன். கருத்துக்களை விளக்கு ம் .ே பா து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/17&oldid=539395" இருந்து மீள்விக்கப்பட்டது