பக்கம்:இரு விலங்கு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரு விலங்கு

3


 அருணகிரிநாதப் பெருமான், முருகனை வணங்கினால் யம பயம் இல்லாமல் போகும், மரணத்தினால் உண் டாகும் துன்பம் அடியோடு ஒழியும் என்ற உண்மையைப் பலபல உருவங்களில் சொல்லியிருக்கிறார். முன்பு அலங் காரப் பாடல் பலவற்றில் இந்தக் கருத்து அமைந்திருப் பதைப் பார்த்திருக்கிறோம். அவனுடைய திருவருளினால் பிறப்புத் துன்பம் ஒழியும் என்பதை இப்போது சொல்ல வருகிறார். அலங்காரமாக அந்த உண்மையைச் சொல் கிறார். 

அதிகாரிகள்

 பிறப்பு, இறப்பு ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் நமக்கு நிகழ்கின்றன. இந்தத் தொழில்களை நடத்து கிறவன் ஆண்டவன். அவன் ஐந்தொழில் உடையவன். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அளித்தல் என்பவை அந்த ஐந்தொழில்கள். அந்த ஐந்து தொழில் களும் இறைவனுடைய ஆணையால் நிகழ்கின்றன. அவன் இந்த ஐந்தையும் ஐந்து அதிகாரிகளைக் கொண்டு நிகழ்த்துகிறான் என்பது புராண வரலாறு, மிகச் சிறந்த அதிகாரி ஒருவன் தான் செய்கின்ற காரியங்களைப் பல பணியாளர்களை வைத்துக்கொண்டு செய்வது வழக்கம், எத்தனைக்கு எத்தனை உயர்ந்த நிலையில் அதிகாரி இருக் கிறானோ அத்தனைக்கு அத்தனை அவனுக்குக் கீழே பல துணை அதிகாரிகளும், ஏவலாளர்களும் இருப்பது இயற் கை. அதுபோல மூல சக்தியாக எழுந்தருளியிருக்கிற கடவுளுக்குத் துணேயாகப் பல சக்திகள் உள்ளன. எல் லாம் ஒருவனாலே நிகழ்வன என்றாலும், உலக இயலை எண்ணி, அவன் ஆணையைச் செயலாற்றுகின்ற சிறுசிறு சக்திகள் இருப்பதாக நினைந்து, அந்த அந்தச் சக்தி களுக்கு உருவம், பணி, பெயர் முதலியன வைத்துப் போற்றுகிறார்கள். அந்த வகையில் இறப்பைத் தருபவன் யமன் என்றும், பிறப்பைத் தருபவன் பிரமன் என்றும் சொல்வது மரபாக இருக்கிறது. இந்த இரண்டு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/25&oldid=1402457" இலிருந்து மீள்விக்கப்பட்டது