பக்கம்:இரு விலங்கு.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இரு விலங்கு 5

தலைவி, எல்லா வித்தைகளுக்குமுரிய சக்தி கலேமகள் என்று போற்றுகிருேம். அந்தக் கலைமகள் பிரமனுடைய மனைவி. அவள் அவன் நாவில் இருக்கிருள். வேத அறிவோடு கலே அறிவும் உடையவன் என்ற குறிப்பைத் தான் இந்த வரலாறு காட்டுகிறது. அறிவுச் செல்வத்தை உடையவன் பிரமன், ஆக்கும் திறத்தை அறிந்தவன் விதிக்கும் முறையை உணர்ந்தவன் என்ற இயல்புகளே அவனேப்பற்றிய வருணனைகள் நமக்கு விளக்குகின்றன;

சிவபெருமான் இரண்டையும் போக்குதல்

இறைவனுடைய திருவருளேப் பெற்றவர்களுக்குப் பிரமணிடத்தில் அச்சம் இராது. யமனிடத்திலும் அச்சம் இராது. பிரமனுக்கு வேலே கொடுப்பதும் அவர்களள வில் நின்று விடும்: யமனுக்கு வேலே கொடுப்பதும் நின்று விடும். பரஞ்சோதியாக இருக்கும் கடவுள் இறப்பும் பிறப்புமாகிய துன்பங்களின்றும் அடியார்களேக் காப் பாற்றுகிருன் என்ற உண்மையைப் புராணக் கதைகள் வெவ்வேறு வகையில் சொல்கின்றன. சிவபெருமான் ஆருயிர்களுக்கு இறப்பையும், பிறப்பையும் போக்கு கிறவன். இந்த உண்மையையே அவனுடைய கையும் காலும் காட்டுகின்றன. சிவபெருமான் தன்னுடைய கையில் பிரம கபாலத்தை வைத்திருக்கிருன். பிரமன் நம்முடைய தலையில் எழுதுகிருன்; நமக்குப் பிறப்புத் துன்பத்தை உண்டாக்குகிருன். ஆனல் சிவபெருமான் அந்தப் பிரமனுடைய தலேயையே திருப்பிக் கையில் வைத்திருக்கிருன். 'பிரமனுல் வரும் துன்பம் இப்பெரு மானுடைய அடியார்களுக்கு இல்லை என்று சொல்வது போல அவன் கையில் அந்தக் கபாலம் விளங்குகிறது. கபாலியின் திருவருள் பெற்றவர்களுக்குப் பிரமல்ை உண்டாகிற பிறப்புத் துன்பம் கிடையாது என்கிற உண்மையை அவனுடைய திருக்கரத்தைக் காண்கிறவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/27&oldid=539405" இருந்து மீள்விக்கப்பட்டது