பக்கம்:இரு விலங்கு.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


§ இரு விலங்கு

கள் தெரிந்து கொள்வார்கள். இறைவன் திருவடி யமனை உதைத்தது. மார்க்கண்டேயனேக் காப்பாற்றுவதற்கு யமனத் தன் திருக்காலால் உதைத்து ஒழித்தவன் சிவ பெருமான். அந்தக் கதையை நாம் கேட்டிருக்கிருேம்: மார்க்கண்டேயனுக்கு மாத்திரம் நிகழ்வது அன்று அது, தன்னே உறுதியாக நம்பினவர்கள் அனைவருக்கும் அருள் செய்யும் திருவடி அது. ஆகவே, சிவபிரான், திருவடியால் கால பயத்தையும் திருக்கரத்தால் பீரமளுல் விளேயும் அச்சத்தையும் போக்குகிறவன் என்பதை நாம் உணர 6)ITէՁ: -

வகுப்பவன்

முருகப்பெருமான் சிவபெருமானினும் வே று அல்லாதவன். ஆகவே சிவபெருமானுக்குரிய இயல்புகள் அவனுக்கும் உரியன, முருகனும் இறப்புத் துன்பத்தை யும் பிறப்புத் துன்பத்தையும் போக்குகிறவன். பலவிடங் களில் யமனத் தைரியத்தோடு அறைகூவுகிருர் அருண கிரியார். முருகன் பிரமனேக் குட்டினன் என்பது கந்த புராண வரலாறு. அது முருகப்பெருமான் பிறவித் துன்பத்தை நீக்குபவன் என்ற குறிப்பைத் தருகிற கதை.

பிரமன் அவரவர்கள் செய்த புண்ணிய பாவங் களுக்கு ஏற்ற வகையில் பிறப்பைத் தருகிறவன். வினேயே பிறப்பையும் இறப்பையும் தருவதற்குக் காரணமானலும் அது ஜடமாகவின் அதுவே இயங் காது. பாங் கி ல் பணம் இருக்கிறது. அதனே அங்கே பலர் போட்டு வைத்திருக்கிரு.ர்கள். வேண்டியபொழுது வாங்கிக் கொள்கிரு.ர்கள். பணத்தைப் போடுகிறவரும் வாங்குகிறவருமாகப் பலர் இருக்கிரு.ர்கள். ஆனல் அந்தப் பணம் தானே உரியவர்கள் கையில் சேருவது இல்லே. அதனே வாங்கவும், கொடுக்கவும் அதிகாரிகள் அங்கே இருக்கிழுர்கள், பணம் ஜடமாதலின் அதுவே இயங்காது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/28&oldid=539406" இருந்து மீள்விக்கப்பட்டது