பக்கம்:இரு விலங்கு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

இரு விலங்கு


ம், நலம் செய்பவர்களுக்கு நன்மையும் தருகிற அதிகாரியாகிய அவனே தவறு செய்து நடந்தானானால் அவனை ஒறுப்பதற்கு ஆண்டவன் வருவான்.

வரலாறு

 ந்தபுராணத்தில் ஒரு வரலாறு வருகிறது. பிரமன் முருகப்பெருமானைக் கவனிக்கவில்லை. எட்டுக் கண் இருந்தும் சின்னஞ் சிறு குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்த முருகனை அவன் காணவில்லை தலை தருக்கி நடந்தான். எல்லா இடங்களையும் ஒரே சமயத் தில் பார்ப்பதற்குரிய கண்கள் இருந்தும், பார்க்க வேண் டியதைப் பார்த்து வணங்காது போனால் அவன் குருடன் அல்லவா? ஆகையால் முருகன் அவனை அழைத்து, "நீ யார்?" என்று கேட்டான். அவன். தான் பெரிய அதி காரம் வகிப்புவுகினைப்போல, "சிருஷ்டி கர்த்தா" என்று
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/30&oldid=1402441" இலிருந்து மீள்விக்கப்பட்டது