பக்கம்:இரு விலங்கு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

இரு விலங்கு


  "நிச்சயமாகப் பிரமன் எனக்குப் பிறப்பைக் கொடுக்க மாட்டான்" என்று அவர் சொல்கிறார்.
 பிரமன் ஒவ்வோர் உயிரினுடைய கணக்கையும் வைத் திருக்கிறான். இன்ன காலத்தில் இன்ன உயிர் இப்படிப் பிறக்க வேண்டுமென்று அந்தக் கணக்கை ஒலையில் எழுதி வைத்திருக்கிறானாம். ஒவ்வோர் உயிரின் புண்ணிய பாவங் களையும் கணக்குப் பண்ணி இன்னார் இன்னார் இன்ன சமயத்தில் பிறக்க வேண்டுமென்று முன்கூட்டியே எழுதி வைத்துக்கொள்கிறான். கணக்கோ, குறிப்போ, நூலோ எதை எழுதினாலும் பழங்காலத்தில் ஒலையில் எழுதுவார் கள். அந்த ஒலைக்குப் பட்டோலை என்று பெயர். 'பிரமன் முருகப்பெருமானுடைய அடியார்களை இனிப் பிறப்பதற்குரியவர்கள் என்று வரிசைப்படுத்தும் கணக் கோலையில் எழுத மாட்டான். இன்னாருக்கு இன்னபடி என்று வரையறை செய்யும் அதிகாரியாதலின், அப்படி எழுதுவதற்கு மனம் இடந்தராது. ஒருகால் முருகப் பெருமானுடைய தண்டனையை அவன் ஏற்றுக்கொள் வதற்கு முன்னால் எழுதியிருக்கலாம். அந்தப் பெரு மானுடைய கையினால் குட்டுப்பட்ட பிறகு, இனி ஜாக்கிரதையாத நடந்துகொள்ள வேண்டுமென்ற அறிவு பிறந்திருப்பதனால், இப்போது அவன் சிறிதும் தவறு செய்யமாட்டான். மற்றவர்களிடத்தில் தவறு செய் தாலும் முருகனோடு தொடர்பு உடையவர்களிடத்தில் நிச்சயமாகத் தவறு செய்யமாட்டான்' என்ற எண்ணம் உடையவர் அருணகிரியார்.
 "பிரமன் உங்களுடைய தலையில் எழுதியிருக்கிறான், மறுபடியும் உங்களுக்குப் பிறப்பு உண்டென்று தன் னுடைய பட்டோலையில் குறித்திருக்கிறான் என்று ஒருவர் சொன்னதாக வைத்துக்கொள்வோம். அவரைப் பார்த்து அருணகிரியார் சொல்கிறார். "அப்படியா?
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/32&oldid=1402443" இலிருந்து மீள்விக்கப்பட்டது