பக்கம்:இரு விலங்கு.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இரு விலங்கு df

பிரமன் என் பெயரை எழுதினன?' என்று கோபத் துடன் கேட்கிரு.ர். அவருடைய கோபம் பிரமனேச் சுட்டுகின்ற முறையினல் தெரிகிறது:

பங்கேருகன்

யாராவது ஒருவரைப் பற்றிச் சிறப்பாகச் சொல்ல வந்தால் அவருடைய சிறப்புகளேயே நாம் சொல்வோம், அவரை இழிவாகச் சொல்ல வேண்டுமானல் அவருடைய இழிவான இயல்புகளேயே பெருக்கிப்பேசுவோம். அவன் இன்ன இழிவான இடத்தில் பிறந்தவன்; இன்ன இழி வான மனிதனுக்குப் பிறந்தவன்தானே?, என்று பேசுவது உலக வழக்கு. அதுபோலவே முறை அறியாது காரியத் தைச் செய்த பிரமனே இங்கே,

பங்கேருகன்

என்று சொல்கிருர். பங்கேருகன் என்பதற்குத் தாமரை யில் உள்ளவன் என்று பொருள். பங்கம்-சேறு தாமரை சேற்றிலே முளைப்பதாலின் பங்கேருகம் என்ற பெயரைப் பெற்றது. இங்கே பிரமனே, "பங்கேருகன்' என்றது, சேற்றிலே பிறந்த தாமரையில் இருக்கிறவன் அல்லவா? என்று இழிவு தொனிக்கும்படி அமைந்தது. சேற்றில் பிறந்த தாமரையில் இரு க் கி ற வ ன் குழம்பிய எண்ணத்துடன் இருப்பது இயல்புதான் என்ற குறிப்பு அந்தப் பெயரில் இருக்கிறது. 'அவன் என் பெயரைப் பட்டோலேயில் இடுவாளு? பிறப்பவர்களுடைய வரிசை யில் சேர்த்துக் கணக்கு எழுதிவிடுவான?’ என்று கேட் கிருர் அருணகிரியார் அப்படி எழுதுவதாக இருந்தால்

அவன் ஒழிந்தான் என்ற தைரியத்தோடு பேசுகிரு.ர்.

பங்கேருகன் ബങ്ങ് ുപേസിയ இடப் பண்டு தளை தன் காலில் இட்டது அறிந்திலனுே:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/33&oldid=539411" இருந்து மீள்விக்கப்பட்டது