பக்கம்:இரு விலங்கு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரு விலங்கு

13


எம் கோன்

 எங்கள் பெருமான் எத்தகையவன் தெரியுமா? முப் பத்து முக்கோடி தேவர்களுடைய துன்பங்களைப் போக் கினவன். அவர்கள் அறுபத்தாறுகோடி அசுரர்களாலே துன்புற்றார்கள். அமரர்கள் யாவரும் முருகன் திருவடி யைப் புகல் அடைந்து, அடைக்கலம் என்று சொன்ன வுடன் அவர்களைக் காப்பாற்றுவதாக உறுதி கூறினான், அடைக்கலம் அடைந்தவர்களைக் காப்பாற்றுதல் அவன் இயல்பு. ஆதலின் உடனே போரைத் தொடங்கினான். அசுரர்கள் அறுபத்தாறு கோடி பேர்களாயிற்றே என்று அவன் அஞ்சவில்லை. தேவர்களுடைய துணை வலிமையை வைத்துக்கொண்டு போரிடலாம் என்றும் எண்ணவில்லை, வேல் அவன் திருக்கரத்தில் இரு க் கி ற து; அதைக் கொண்டு எத்தனை பெரிய பகைவர்களாக இருந்தாலும் ஒழித்துவிடலாம். வேறு யாருடைய கையிலும் அத் தகைய வேல் இல்லை. அது ஒப்பற்ற வேல். அவன் அந்த வேலாயுதத்தை எடுத்துக்கொண்டு நடந்தபோதே சூரன் மனத்திற்குள் அஞ்சினான். கிரெளஞ்சமலை திடுக் கிட்டது. சூரன் பின்னாலே புகுவதற்கு இருந்த கடலும் அலறியது. இதை அலங்காரமாக முன்பும் ஒரு பாட்டில் சொன்னார்.
    "......கடலழக் குன்றழச் சூரழ விம்மியழும்
    குழந்தைக் குறிஞ்சிக் கிழவன் என்று ஒதும் குவலயமே.' 

இங்கு வேறு வகையில் அதே கருத்தைச் சொல்கிறார்.

                                 தனி வேல் எடுத்துப்

பொங்கோதம் வாய்விடப் பொன்னஞ் சிலம்பு புலம்ப வரும் எம் கோன். எங்களுடைய கடவுளாகிய முருகப்பெருமான் வேல் எடுத்து நடக்கிறான். அமரர்களுடைய துன்பத்தைப் போக்கவேண்டுமென்ற எண்ணத்தோடு நடைபோடு கிறான். இனிமேல்தான் போர்க்களத்திற்குச் சென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/35&oldid=1402452" இலிருந்து மீள்விக்கப்பட்டது