பக்கம்:இரு விலங்கு.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


14 இரு விலங்கு

போரிடவேண்டும். இவன் தன்னுடைய தளத்திலிருந்து நடைபோடும்போதே எதிர்த்தளத்தில் உள்ள பகை வர்களுடைய மனத்தில் அச்சம் குடிகொள்கிறது. பொங்கி வரும் கடல், ஐயோ! இந்த வேல் ந ம் ைம ச் சுவற அடிக்கும் போல் இருக்கிறதே! இந்தப் படுபாவி சூரன் நம்மிடத்தில் வந்து மறைந்துகொள்ள, அது காரணமாக நம்மை இந்தக் கூர்வேல் சுவற அடித்துவிடப்போகிறதே! என்று வாய்விட்டு அலறுகிறதாம். கடல் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும். முருகன் வேலைத் தாங்கி நடைபோட்டபோது அந்த ஒலி, ஐயோ! எனக்குத் திங்கு வரப்போகிறதே என்று வாய்விட்டுப் புலம்பு வது போல இருக்கிறதாம். பெரிய மலை உருவத்தில் இருந்த கிரெளஞ்சாசுரன் அந்த வேல் தன்னேப் பொடிப் பொடியாக்கப் போகின்றதே என்று புலம்புகின்ருளும்,

- தனி வேல் எடுத்துப் பொங்கோதம் வாய்விடப் பொன்னஞ் சிலம்பு புலம்ப வரும் எங் கோன் அறியின் இனி நான்முகனுக்கு இரு விலங்கே.

'முப்பத்து முக்கோடி அமரர்களுக்குப் பகையாக வந்தவர்களேயே அழிக்கும் பெருமான் எனக்குத் துணை யாக இருக்கும்போதே பிரமனுல் என்ன தீங்கு நேரப் போகிறது?' என்று தைரியத்தோடு பேசுகின்ருர்.

கடுமையான தண்டனை

அந்தப் பெருமான் இதை அறிந்தால் சும்மா இருப்பான முன்னலே ஒரு முறை பிரமன் தனக்குத் தீங்கு செய்தான் எ ன் று அவனுக்குத் தண்டனே அளித்தான்; செருக்கினல் வணங்காமல் சென்ருன் என்ப தற்காகத் தலையில் குட்டிக் காலில் களேயிட்டான். இப்போதோ பழைய தண்டனே மாதிரி அல்ல; இன்னும் கடுமையாகத் தண்டனை தருவான்.

எம்கோன் அறியின் இனி நான்முகனுக்கு இருவிலங்கே, • ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/36&oldid=539414" இருந்து மீள்விக்கப்பட்டது