பக்கம்:இரு விலங்கு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நாலாயிரம் கண்

எண்ணத் தொடர்ச்சி

 நான்கு பேர்கள் உட்கார்ந்துகொண்டு பேசும் போது ஏதேனும் ஒரு பொருளைப் பற்றிப் பேச்சுத் தொடங்கினால் தொடர்ந்து அந்தப் பொருளின் சார்பாக வே பேச்சு நிகழும். மற்றவர்களும் அதன் சார்பாகவே நினைந்து பேசுவார்கள். ஒருவர் ஒரு கல்யாணத்தைப் பற்றிப் பேசப் புகுந்தால் மற்றவர்களும் தாங்கள் கலந்து கொண்ட கல்யாணங்களைப் பற்றியே பேசுவார்கள். இது மனிதர்களுக்கு இயல்பு. ஒ வ் வோ ர் எண்ணமும் தொடர்த்து வருவதால் இதை எண்ணத் தொடர்ச்சி (Association of ideas) என்று கூறுவார்கள்.
 அருணகிரியார், சென்ற பாட்டில் பிரமனைப் பற்றிச் சொன்னார். 'முருகப் பெருமானை நம்பினவர்களுக்குப் பிறவித்துயர் இல்லை' என்பதைப் புலப்படுத்த, "பிரமன் என் தலையில் எழுதமாட்டான். எழுதினால் அவனுக்குத் தண்டனை கிடைக்கும்" என்ற கருத்துள்ள பாடலைப் பாடினார். மறுபடியும் பிரமனுடைய நினைவு அவருக்குத் தொடர்ந்து வந்தது. இந்தப் பாட்டிலும் பிரமனைப் பற்றிப் பேசுகின்றார். "இனிமேல் பிரமன் என்னைப் பிறப்பவர்களின் வரிசையில் எழுதுவது கிடக்கட்டும். இப்போதே ஒரு பிழையை எனக்குச் செய்திருக்கிறானே!" என்று சொல்வது போல இந்தப் பாட்டை அமைக்கிறார்.

பால் வாங்கிய கணவன்

 ரிடத்தில் ஒரு வள்ளல், வந்தவர்களுக்கெல்லாம் பால் வழங்கிக் கொண்டிருக்கிறார் என்று ஒரு தாய் அறிந்தாள். அந்தத் தாய்க்கு நான்கு குழந்தைகள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/40&oldid=1297668" இலிருந்து மீள்விக்கப்பட்டது