பக்கம்:இரு விலங்கு.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நாலாயிரம் கண் 21

நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே என்று பாடினுர், - -

ஆலய தரிசனம்

இறைவனத் தரிசனம் செய்ய விரும்புகிறவர்கள்

அவனுடைய திருக் கோயிலுக்குச் சென்று, அவனுடைய

உருவத்தைக் கண்டு வழிபடுகிரு.ர்கள். கோயிலில் ஐந்து இந்திரியங்களுக்குரிய அநுபவப் பொருள்கள் பல உண்டு.

இறைவனுடைய திருக்கோலத்தைக் கண்டு, அவனுடைய

புகழை அடியார்கள் பாடக் கேட்டு, அங்கே உள்ள

தூபப் பொருள்களின் மணத்தையும் அபிடேகச் சந்தன

மணத்தையும் நுகர்ந்து நல்ல நெய்யிட்டுச் செய்த பிர

சாதத்தை உண்டு, ஐம்பொறிகளுக்குமுரிய இன்பத்தை

அநுபவிக்கலாம். இத்தனேயும் ஆண்டவனுடைய வழி

பாட்டின் பகுதிகளே. ஆனாலும் ஆண்டவனேத் தரிசித்து

வந்தேன் என்று சொல்வதே வழக்கம். மற்ற இந்திரி

யங்களுக்குரிய நுகர்ச்சியைப் பெற்ருலும் பெருவிட்டா லும் கண்ணுல் காணும் காட்சி மிகவும் தலைமையானது. கோயிலுக்குச் செல்லாமலே பிரசாதத்தை வாங்கிச் சாப்

பிடலாம். தூபப் பொருள்களே நுகரலாம். திருப்புக ைமுக்

கேட்கலாம். ஆண்டவனேக் கண்ணுல் காணவேண்டு மென்ருல் திருக் கோயிலுக்குச் செல்லத்தான் வேண்டும். ஆண்டவனைத் திருக்கோயிலிலே கண்டு இன்புற்று வரு வதுதான் மிகவும் முக்கியமானது. ஆலய வழிபாடு என்பது தரிசனத்தையே தலைமையாகக் கொண்டது.

கண்ணுல் காணுதல்

hம்முடைய உடம்பில் பத்துக் கருவிகள் இருக்கின் றன. செயல் செய்யும் கருவிகள் ஐந்தும், நுகர்ச்சிக்குரிய கருவிகள் ஐ.ந்துமாகும். முன்னவற்றைக் கர்மேந்திரியங் கள் என்றும், பின்னவற்றை ஞானேந்திரியங்கள் என்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/43&oldid=539421" இருந்து மீள்விக்கப்பட்டது